தொல்லியல் நோக்கில் சங்க இலக்கியம் (கீழடி அகழாய்வுச் சான்றுகளை முன்வைத்து)


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal
Volume-2 Issue-3
Year of Publication : 2020
Authors : T.Megarajah


Citation:
MLA Style: T.Megarajah "Tholliyal Nokkil Sanga illakiyam" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I3 (2020): 108-121.
APA Style: T.Megarajah, Tholliyal Nokkil Sanga illakiyam, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i3),108-121.

சுருக்கம்:
சங்க இலக்கியம் காலங்கடந்தும் பேசப்படும் ஆய்வுச்சாகரமாக விளங்குகின்றது. பண்டைத்தமிழரது வாழ்வியலும், தமிழக வரலாறும் பற்றி அறிந்துகொள்வதற்குரிய மூலாதாரங்களாக இவ்விலக்கியங்கள் உள்ளன. காலத்துக்குக்காலம் வெவ்வேறு சிந்தனைகள் முக்கியத்துவம் பெறுகின்றபோது அவற்றுக்கு அமைய சங்க இலக்கியம் ஆராயப்பட்டு வந்திருப்பதைக்காணலாம். அண்மையில் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வு, சங்க இலக்கியங்களை தொல்லியல் நோக்கில் ஆராய்வதற்கான வலுவான சூழலை ஏற்படுத்தியுள்ளது. அதனடிப்படையிலேயே இவ்வாய்வு கீழடி அகழாய்வுச்சான்றுகளை முன்வைத்து சங்க இலக்கியங்களைத் தொல்லியல் நோக்கில் ஆராய்வதாக அமைகின்றது. இவ்வாய்வுக்கு சங்க இலக்கியங்களும் கீழடி அகழாய்வுச் சான்றுகளும் மூலாதாரங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.சங்க இலக்கியங்கள் பேசுகின்ற பண்டைத்தமிழர்களது வாழ்வியல் நடைமுறைகள் வெறும் கற்பனையானவை அல்ல என்றும் சங்க இலக்கியங்களின் வாழும் சாட்சியாக கீழடி அகழாய்வுச் சான்றுகள் உள்ளன என்றும் இவ்வாய்வு நிறுவுகின்றது. சங்க இலக்கியங்கள் பதிவுசெய்துள்ள நகர நாகரிக வாழ்வியலைச் சான்றுபடுத்துகின்ற பல்வேறு தொல்லியல் ஆதாரங்கள் கீழடியில் கிடைக்கப்பெற்றுள்ளன. இவை முன்னர் கூறப்பட்ட பல்வேறு கருத்தியல்களை மறுபரிசீலனைக்கு உட்படுத்துகின்றனவாகவும் விளங்குகின்றன. தமிழர்களின் எழுத்தறிவு காலம் கிமு. ஆறாம் நூற்றாண்டுக்குரியதென கீழடியில் கிடைக்கப்பெற்ற பானையோடுகள் உறுதிப்படுத்துகின்றன. நெசவுத்தொழிலுடன் தொடர்புடைய சான்றாதாரங்கள் தமிழகத்தில் நகர நாகரிகம் சிறந்து விளங்கியமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன. இவ்வகையில் சங்க இலக்கியங்களை முன்னிறுத்திய பலமான ஆய்வுகள் இடம்பெறவேண்டியது அவசியமாகின்றது.

முக்கிய வார்த்தைகள்:
கீழடி அகழாய்வு, சங்க இலக்கியமும் கீழடி அகழாய்வும், நெசவுத்தொழிலுடன் தொடர்புடைய சான்றுகள், அணிகலன்கள், உறை கிணறு, விலங்குகளின் எலும்புகள், தமிழி பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானையோடுகள், மட்பாண்டப்பொருள்கள், விளையாட்டுப் பொருட்கள், கட்டுமானப் பொருள்கள், சுடுமண் முத்திரை, நகர நாகரிகமும் வணிகப்பண்பாடும்.

துணைநூற்பட்டியல்:
[1] இளங்கோ,சி. (2019). தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் கீழடி வரை, சென்னை: அலைகள் வெளியீட்டகம்.
[2] சிவானந்தம்,இரா., கணேசன் சுந்தர், (2019).‘கீழடி தென்னிந்திய தொல்லியல் வரலாற்றில் ஒரு ஒளிக்கீற்று’, காலச்சுவடு, சென்னை: காலச்சுவடு பதிப்பகம்.
[3] சேரன்,எம்., சிவநாதம்,ஆர்(பதி.), (2019).கீழடி வைகை நதிக்கரையில் சங்ககால நகர நாகரிகம், சென்னை: தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை.
[4] சசிகலா,கோ. (2019). தொல்லியல் நோக்கில் சங்ககால சமூகம், சென்னை:சிந்தன் புக்ஸ்
[5] பரிமணம்,அ.மா., பாலசுப்பிரமணியன்,கு.வெ.(பதி), (2004).பத்துப்பாட்டு, முதற் பகுதி,
[6] சென்னை: நியூ செஞ்சுரிபுக் ஹவுஸ்
[7] பரிமணம்,அ.மா.பாலசுப்பிரமணியன்,கு.வெ. (பதி), (2004).பத்துப்பாட்டு, இரண்டாம்
[8] பகுதி, சென்னை: நியூ செஞ்சுரிபுக் ஹவுஸ்
[9] சுப்பிரமணியன்,ச.வே.(பதி.), (2011). சங்க இலக்கியம் மூலமும் முழுமையும், சென்னை:மாணிக்கவாசகர் பதிப்பகம்.
[10] இராசமாணிக்கனார்,மா. (2016). பத்துப்பாட்டு ஆராய்ச்சி, சென்னை: சாகித்திய அகதெமி.
[11] அலெக்சாண்டர் நவீனா, (2019). கீழடி,கொடுமணல், அழகன்குளம் மற்றும் அரிக்கமேடு, சென்னை:அந்தாழை.
[12] கவிதா,நா.(2016): ‘சங்க இலக்கியங்களில் சான்றாவணம் - கீழடி’, வல்லமை இணைய இதழ் : https://www.vallamai.com/?p=73746