புலம் பெயர்ந்த ஈழத்து இதயங்கள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2022 by IRJTSR Journal
Volume-4 Issue-4
Year of Publication : 2022
Authors : Dr.P.Senthilnathan


Citation:
MLA Style: Dr.P.Senthilnathan, "Migrant Eelam Hearts" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V4.I4 (2022): 5-14.
APA Style: Dr.P.Senthilnathan, Migrant Eelam Hearts, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v4(i4), 5-14.

சுருக்கம்:
மனிதனின் மகத்தான கண்டுபிடிப்புகளில் தலையாயது மொழியே ஆகும். உள்ளத்து உள்ளதைத் தெற்றெனத் தெரிவிக்கும் சாதனம் மொழி. . மொழி மட்டும் இல்லாதிருந்தால் உலகம் வெற்று ஒலிகளாலேயே நிரம்பி இருந்திருக்கும். மொழியிலிருந்தே ஏனைய அனைத்துக் கலைகளும் உருவாகின என்று கூறலாம். விளங்க வைக்க வேண்டிய இடத்தில் விளக்கமாகவும், சுருங்கச் சொல்ல வேண்டிய இடத்தில் சுருக்கமாகவும் சொல்லி விளக்குவதற்கு மொழியே அடிப்படையாகிறது. சுருங்கச் சொல்லும் மொழி வடிவம் கவிதை. ஏனையவை விளங்கச் சொல்லும் வடிவங்கள். தமிழில் ஒருவரிக் கவிதையான ஆத்திச்சூடி முதல் 786 அடி கவிதையான மதுரைக்காஞ்சி வரை அடி வரையறையில் மாறுபட்ட வடிவங்களைக் கொண்ட எண்ணற்ற கவிதை வடிவங்கள் உள்ளன . படைப்பாளன் தன் எண்ணத்தைத் துல்லியமாகவும் கூர்மையாகவும் வெளிப்படுத்த கவிதை வடிவத்தையே தேர்கிறான். அவ்வகையில் சங்க இலக்கியம் முதல் சமீபகால இலக்கியங்கள் வரை விரவிக் கிடக்கும் கவிதைகளில் புலம்பெயர் படைப்பாளர்களின் கவிதைகள் தனித்த கவனம் பெறுகின்றன. குறிப்பாக ஈழம் சார்ந்த புலம்பெயர் படைப்பாளுமைகளின் "இருபதாம் நூற்றாண்டு ஈழத்து தமிழ்க் கவிதைகள்" என்ற நூல் சிறப்பிடம் பெறுகிறது. தொகுப்பில் இடம் பெற்றுள்ள பெண் கவிஞர்களின் கவிதைகளின் பாடு பொருள் பற்றி பகுப்பாய்வு அணுகுமுறையில் இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.

முக்கிய வார்த்தைகள்:
இவ்வாய்வு விளக்கமுறை ஆய்வாகவும், திறனாய்வு முறை ஆய்வாகவும், சமுதாயவியல் ஆய்வாகவும் அமைகின்றன.

துணைநூற்பட்டியல்:
[1] ஸ்ரீ.பிரசாந்தன்(தோ.ஆ) 20 ஆம்- நூற்றாண்டு, ஈழத்துத் தமிழ்க்விதைகள், இலங்கை பூபாலசிங்கம் புத்தகசாலை, வைரவிழா வெளியீடு, 202,340, கடற்கரை சாலை கொழும்பு-11, ஸ்ரீலங்கா, முதல் பதிப்பு,அக் 2006.
[2] அறிவுமதி, வலி தமிழ்மண் பதிப்பகம், 2,சிங்கார வேலர் தெரு, தியாகராயர் நகர்,சென்னை-17 முதல் பதிப்பு,கார்த்திகை 2006.
[3] முனைவர் கோ.விசயராகவன், - புலம்பெயர்ந்த தமிழர் வரலாறும்,வாழ்வியலும்,
[4] முனைவர் கு.சிதம்பரம், புலம்பெயர்ந்த தமிழர் வரலாறும் வாழ்வியலும்,
[5] முனைவர் இரத்தின,வெங்கடேசன்,உலக தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னை-13