களவழி நாற்பதில் போர்க்களத்தில் யானைகள்– ஓர் ஆய்வு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal
Volume-7 Issue-3
Year of Publication : 2025
Authors : Sudhakaran Vidursiya


Citation:
MLA Style: Sudhakaran Vidursiya, "Elephants on the battlefield in the 1940s – a study" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I3 (2025): 25-30.
APA Style: Sudhakaran Vidursiya, Elephants on the battlefield in the 1940s – a study, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i3), 25-30.

சுருக்கம்:
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் நிகழ்ச்சியாகிய போர்ச்செய்தி பற்றிக் கூறும் ஒரே நூல் களவழி நாற்பது ஆகும். ஒரு தோல்வியின் காரணமாகவும் ஒரு வெற்றியின் விளைவாகவும் இந்நூல் எழுந்ததுஎனலாம். இதை எழுதியவர் பொய்கையார் என்னும் புலவர். இவர் சேரமான் கணைக்கால் இரும்பொறையின் நண்பன் ஆவார். “சோழன் செங்கணானும் சேரமான் கணைக்கால் இரும்பொறையும் போர் புறத்துப் பொருதுடைந்துழிச் சேரமான் கணைக்காலிரும்பொறையைப் பற்றிக் கொண்டு சோழன் செங்கணான் சிறைவைத்துழிப் பொய்கையார் களம்பாடி வீடு கொண்ட களவழி நாற்பது” என்று பொய்கையார் இந்நூலைப் பாடியதற்கான காரணத்தை எடுத்துக்கூறும் பழைய குறிப்பு ஒன்றுள்ளது. இத்தொடரிலிருந்து சோழன் செங்கணான் சேரமான் இரும்பொறையோடு போரிட்டு வெற்றி பெற்று சேரனை சிறையிலடைத்தான் என்பதும் அப்பொழுது பொய்கையார் என்னும் பெரும் புலவர் சோழனது வெற்றியைப் புகழ்ந்து பாடி அவனை (சேரனை) சிறையிலிருந்து விடுதலை செய்ய உதவினர் என்பதும் தெரியவருகின்றன. இவ்வரலாற்றுக் குறிப்பினை பிற்காலத்தில் வெளிவந்த கலிங்கத்துப்பரணி, மூவருலா, தமிழ்விடு தூது போன்ற நூல்கள் எடுத்துக்காட்டுகின்றன. “நல்லவன் பொய்கை களவழி நாற்பதுக்கு வில்லவன் கால் தளையை விட்டகோன்” என்கிறது மூவருலா. “களவழிக் கவிதை பொய்கை உரை செய்ய உதியன் காழ்வழித் தளையை வெட்டி அரசு இட்ட அவனும்” என்கிறது கலிங்கத்துப்பரணி.இந்நூலில் போர்க்களக் காட்சிகளை உவமை வாயிலாக ஆசிரியர் விளக்கும் பாங்கு மிக அருமையானதாகும். இந்நூலில் நாற்படைகள் பற்றிய செய்திள் இடம் பெறினும் யானைப்போரைப்பற்றிய செய்திகளே மிகுதியாக உள்ளன. போர்களத்தில் திரும்பும் திசைகளெல்லாம் யானைகளே நடமாடுகின்றன. அவ்வாறாக போர்க்களத்தில் நிரம்பியிருக்கும் யானைகளின் வெற்றிச் செயல்களும் யானைகளின் வீழ்ந்து கிடக்கும் காட்சிகளும் புலவரினால் தத்துரூபமாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இவற்றை எடுத்துரைப்பதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

முக்கிய வார்த்தைகள்:
பதினெண் கீழ்க்கணக்கு, புறப்பொருள், களவழி நாற்பது, களம்பாடி வீடு, கலிங்கத்துப்பரணி, மூவருலா, தமிழ்விடு தூது.

துணைநூற்பட்டியல்:
[1] சிதம்பரநாத முதலியார்.டி.கே,(1947),“முத்தொள்ளாயிரம்”;, தமிழ் பண்னை, சென்னை.
[2] கோவிந்தராசமுதலியார்.கா.ர(1913),“களவழி நாற்பது மூலமும் உரையும்”, மதராஸ்ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை.