பாண்டியநாட்டில் நடுகல் வழிபாடும் நம்பிக்கையும் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal Volume-7 Issue-3 Year of Publication : 2025 Authors : Dr.C.Sellappandian |

|
Citation:
MLA Style: Dr.C.Sellappandian, "Nadugal worship and belief in the Pandyan kingdom" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I3 (2025): 92-96.
APA Style: Dr.C.Sellappandian, Nadugal worship and belief in the Pandyan kingdom, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i3), 92-96.
|
சுருக்கம்:
வழிபாடு என்பது மனிதன் நாடோடியாக உணவுக்காக அலைந்த காலத்திலேயே தொடங்கப்பட்டது. உணவு சேகரிப்பவனாக மட்டுமே இருந்த மனிதன் காட்டு விலங்குகளை வேட்டையாடி உண்டான். அதனால் காட்டு விலங்குகளை வேட்டையாடி உண்டான். அதனால் காட்டு விலங்குகளைக் கண்டு அவனுக்கு பயமில்லாமல் போனது. அதே வேளையில் இடி, மின்னல், தீ ஆகியவை மனிதனைப் பயமுறுத்தின. அதன் விளைவாக இம்மூன்றையும் முதலில் வழிபடத் தொடங்கினர். இதுவே இயற்கை வழிபாட்டு மரபின் தொடக்கம் ஆகும். இயற்கையை வணங்கிய மனிதன் பின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் பாம்பு உள்ளிட்ட உயிரினங்களையும் வழிபடலானான். நாடோடி வாழ்க்கை முடிந்து நிலையான வாழ்க்கைக்கு திரும்பிய பின்பு ஆவி, ஆன்மா, குறித்த நம்பிக்கைகள் தோன்றின. அதனால் மனிதன் இறந்த பின் அவனின் ஆன்மா இப்புவியில் இருக்கும் ஆன்மாவை சந்தோசப்படுத்த வேண்டும் இல்லையெனில் அந்த ஆன்மா தன் குலத்தையேஅழித்துவிடும் என்ற நம்பிக்கை வளர்ந்தது. குறிப்பாக பெருங்கற்கால மக்களிடம்இந்த நம்பிக்கைஇருந்தது. எனவே தான் இறந்தவர்களை தாழிகளில் வைத்துப்புதைக்கும் பழக்கம் இக்காலத்தில் தோன்றியது. பெருங்கற்கால மக்கள் இறந்தவர்களை சவ அடக்கம், தாழி, கல்வட்டம், கல்பதுக்கை உள்ளிட்டமுறைகளில் புதைத்தனர். பெருங்கற்கால மக்கள் உடல்வேறு உயிர்வேறு என்று நம்பினர். உயிர் அழிவற்றது. எனவே இறந்த ஆன்மாவைத் திருப்தியடையச் செய்யவழிபாட்டு முறைகள் தோன்றின அவற்றில் ஒன்று நடுகல் வழிபாட்டு முறையாகும்.
|
முக்கிய வார்த்தைகள்: வழிபாடு, மனிதன், உணவு, காட்டு, விலங்குகள், இடி, மின்னல், தீ.
|
துணைநூற்பட்டியல்:
[1] நேர்காணல், சங்கர ஆவடையம்மாள், 80 கத்தாளம்பட்டி.
[2] நேர்காணல், பாலகிருஷ்ணன், 62 கத்தாளம்பட்டி.
[3] நேர்காணல், ஐயரக்காள், 83 கத்தாளம்பட்டி.
[4] நேர்காணல், மங்கையர்க்;கரசி, 64 கத்தாளம்பட்டி.
[5] ஊ.மு. மாணிக்கவாசகம் என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள், நர்மதா பதிப்பகம்,சென்னை, 2009.
[6] கே.எஸ். சுப்பையா, நோய் தீர்க்கும் மருந்துகள், நலம் பதிப்பகம், சென்னை,2009.
|