| முஸ்லீம் சமூகத்தின் களிகம்புநடனம் ஓர் ஆய்வுநோக்கு |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal Volume-7 Issue-4 Year of Publication : 2025 Authors : Dr. Thakshayinyparamadevan |

|
Citation:
MLA Style: Dr. Thakshayinyparamadevan, "A Study Perspective on the Kalikambu Dance of the Muslim Community" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I4 (2025): 1-7.
APA Style: Dr. Thakshayinyparamadevan, A Study Perspective on the Kalikambu Dance of the Muslim Community, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i4), 1-7.
|
சுருக்கம்:
இந்தியாவின் பல்வேறுசமூகங்கள் தங்களதுமதமும் மரபும் கலாச்சாரவடிவங்களின் மூலம் தனித்துவத்தைக் கொண்டுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒரு பாரம்பரியகலை வடிவமாக முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் “களிகம்புநடனம்” அமைகிறது. இதுமதநம்பிக்கை, ஆன்மீக உணர்வு மற்றும் சமூகஒற்றுமையின் வெளிப்பாடாகவிளங்கும் மக்கள் நடனமாகும்.
களிகம்புநடனம் முஸ்லிம் சமூகத்தின் மதவழிபாட்டுமரபுகளில் தோன்றி,பீர்கள் மற்றும் வலிகள் தொடர்பானநினைவுநிகழ்வுகளின் போதுஆடப்படும் பாரம்பரியகலைவடிவமாகும். இந்நடனத்தில் ஆடுபவர்கள் வட்டவடிவில் சுழன்றுகம்புகளுடன் தாளஒத்திசைவாகஆடுவர். தவில்,தப்பு,உத்தரீனநாதஸ்வரம் போன்றவாத்தியங்கள் இசைக் கருவிகளாகப் பயன்படுகின்றன. பாடல்கள் பெரும்பாலும் மதப் புகழ் பாடல்கள் மற்றும் வலிகளின் பெருமையைப் புகழும் வரிகள் அடங்கியவையாக இருக்கும
இந்நடனம் சமூகத்தில் ஒற்றுமை, ஆன்மிகபரவசம், நம்பிக்கை ஆகியவற்றை வளர்க்கும் பணியாற்றுகிறது. மேலும், இது இளைஞர்களிடையே ஒழுங்கு, ஒத்துழைப்பு, மதமரியாதை போன்றபண்புகளை உருவாக்குகின்றது. களிகம்புநடனம் மக்கள் வாழ்க்கை,மரபுமற்றும் மதம் இணைந்த கலாச்சார அடையாளமாகவிளங்குகிறது.
தற்காலத்தில் இந்தநடனம் சிலபகுதிகளில் குறைந்துகாணப்படினும், சில முஸ்லிம் சமூகங்களில் இது இன்னும் மதவிழாக்களில் உயிருடன் நிலைத்துநிற்கிறது. நவீன இசை,ஒளி, ஆடை ஆகியவற்றின் தாக்கத்தால் இதன் வடிவம் மாற்றம் அடைந்தாலும்,அதன் மூல ஆன்மீகசாரம் மாறாமல் தொடர்கிறது. ஆய்வாளர் நோக்கில் களிகம்புநடனம் மக்கள் மரபு,மதகலை, கலாச்சார வெளிப்பாடு ஆகிய தளங்களில் முக்கிய ஆய்வுத் துறையாகஅமைந்துள்ளது.
|
முக்கிய வார்த்தைகள்: முஸ்லிம் சமூகம், களிகம்புநடனம், மக்கள் கலை, பாரம்பரியம், ஆன்மிகம், கலாச்சாரமதவிழா.
|
துணைநூற்பட்டியல்:
[1] அனஸ்.எம்.எஸ்.எம். (2007),இலங்கையில் முஸ்லிம் நுண்கலை: ஒருவிமர்சனஆய்வு,கொழும்பு: குமரன் புத்தக இல்லம்,
[2] அஜ்மல்கான்,பீ.மு. உவைஸ்.ம.மு.. (1997), இஸ்லாமியத் தமிழ் இலக்கியவரலாறுதொகுதிநான்கு,மதுரை: மதுரைகாமராசர் பல்கலைக்கழகம்.
[3] ~ரீப் றம்சீன்,எம்., (1999), இஸ்லாமியக் கலைகள்,வவுனியா: மதார் உம்மாவெளியீடு
[4] ~hகுல் ஹமீது,எம்.ஏ. (பதிப்.), (1988), மஜ்முஅ முனாஜாத்,சென்னை: ஹாஜி எம்.ஏ.~hகுல் ஹமீதுஅன்டு ஸன்ஸ்.
[5] ஜெமீல்.எஸ்.எச்.எம்.(பதிப்.), (1997),அம்பாரைமாவட்ட முஸ்லிம்கள்,கொழும்பு: கலாசாரசமயஅலுவல்கள் அமைச்சு, முஸ்லிம் சமயகலாசாரஅலுவல்கள்திணைக்களம்.
[6] றசூல்,ஹெச்.ஜி. (2016,தரநெ.02). 'பக்கீர~hக்கள் எனும் கதைசொல்லிகள்'(27யுரபயளவ.2017) சுநவசநைஎநன கசழஅ அயடயபையட.ஊழஅஃஃp-8338.
[7] Macdonald Millton Cowan>j.(Ed.). (1980). A dictionary of Modern Written Arabic and Evans Ltd.
|