| சம்பூர் எம்.வதனரூபனின் கவிதைகளில் அழகியல் அம்சங்கள் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal Volume-7 Issue-4 Year of Publication : 2025 Authors : Sudhakaran Vidursiya |

|
Citation:
MLA Style: Sudhakaran Vidursiya, "Aesthetic aspects in the poems of Sampur M. Vathanarupan" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I4 (2025): 8-18.
APA Style: Sudhakaran Vidursiya, Aesthetic aspects in the poems of Sampur M. Vathanarupan, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i4), 8-18.
|
சுருக்கம்:
ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் கவனிப்புப்பெறுகின்ற திருகோணமலைக் கவிஞர்களுள் சம்பூர் எம்.வதனரூபனும் முக்கியமானவர். சிறுவயதிலிருந்தே கவிதை எழுதத் தொடங்கிய இவர் இதுவரை இரண்டு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். இத்தொகுதிகளில் மாத்திரமின்றி நூற்றுக்கணக்கான கவிதைகளை வலைத்தளங்களிலும் பிரசுரித்துள்ளார். தனித்துவம்மிக்க பல கவிதைகளை எழுதியுள்ளபோதிலும் பெயரளவில் ஒரு கவிஞராக அடையாளப்படுத்தப்படும் நிலையிலேயே உள்ளார். எனவே வதனரூபனுடைய கவிதைகளின் அழகியல் அம்சங்களை எடுத்துக்கூறுவதையும் ஈழத்து தமிழ் கவிதை வரலாற்றில் அவர் பெறுகின்ற முக்கியத்துவத்தினை வலியுறுத்துவதையும் முக்கிய நோக்கங்களாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. இவரது கவிதைகள் பழைமைக்கும் புதுமைக்கும் இடையில் பாலம் போட்டுள்ளவையாக இருப்பதுடன் எரியும் தேசப் பிரச்சினைகளை இலக்கிய வடிவமாக்கி கொடுத்திருக்கின்றமையினையும் காணமுடிகின்றது. இவரின் கவிதைகளில் அனேகமானவை மண் மீதான பற்றினையும், சொந்த மண்ணின் ஏக்கங்களையும், யுத்தத்தால் ஏற்பட்ட விளைவுகளையும், மீண்டும் விடியலை எதிர்பார்த்தபடி அகதி முகாம்களில் வாழும் மக்களின் நிலையினையும் புலப்படுத்துகின்றன. உணர்வுபூர்வமாக இக்கவிதைகளை அவர் எடுத்துரைத்துள்ளார். இவ்விதத்தில் பகுப்பாய்வு முறையியலுக்கு அமைய கவிஞர் வதனரூபனின் கவிதைகளை ஆய்வுக்குட்படுத்தி இன்றைய ஈழத்து நவீன தமிழ்க் கவிஞர்களுள் அவர் தவிர்க்கமுடியாத ஆளுமை என்பதை இவ்வாய்வு முன்நிறுத்துகின்றது.
|
முக்கிய வார்த்தைகள்: வதனரூபன், கவிதைகள், அழகியல் அம்சங்கள், படிமம், குறியீட்டு மொழி.
|
துணைநூற்பட்டியல்:
[1] கைலாசபதி.க. முருகையன்.இ., (1970),கவிதை நயம், குமரன் அச்சகம்: கொழும்பு.
[2] செல்வராஜா.என்., (2012). ஈழத்தமிழரின் பிரசுரங்களும் போர்க்காலப் பிரசுரங்களும் போராட்ட இலக்கியங்களும், ஞானம் சிறப்பிதழ்.
[3] நவம்.திருமலை., (2012),திருகோணமலை கலை இலக்கிய வரலாறு, குமரன் புத்தக இல்லம்: கொழும்பு.
[4] வதனரூபன்.எம்., (2006),குறைந்தபட்சக் கோரிக்கைகள், சிராய்ப்பு வெளியீடு: திருகோணமலை.
[5] வதனரூபன்.எம்., (2013),அடையாளமற்றிருத்தல், வடலி வெளியீடு: சென்னை.
[6] வல்லிக்கண்ணன், (1977),புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்,; அகரம் பதிப்பகம்: தஞ்சாவூர்.
[7] ஸதீஸ்குமார்.அ., (2017),சம்பூர் இடப்பெயர்வும் மீள் குடியேற்றமும், சம்பூர் ம.வி. முன்னாள் மாணவ வெளியக சங்கம்: மூதூர்.
|