| வட்டக்களரிக்கேயுரிய மரபுவழி நிகழ்த்து கலையாக மட்டக்களப்பு வடமோடிக் கூத்து : ஓர் ஆய்வு |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal Volume-7 Issue-4 Year of Publication : 2025 Authors : Professor C. Jayasankar, T. Gouriswaran |

|
Citation:
MLA Style: Professor C. Jayasankar, T. Gouriswaran, "Batticaloa Vadamodik Koothu as a traditional performing art of the Vattakallarikeyuri: A study" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I4 (2025): 19-24.
APA Style: Professor C. Jayasankar, T. Gouriswaran, Batticaloa Vadamodik Koothu as a traditional performing art of the Vattakallarikeyuri: A study, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i4), 19-24.
|
சுருக்கம்:
இலங்கையின் மட்டக்களப்புப் பகுதியில் பயிலப்பட்டு வருகின்ற மரபுவழி நிகழ்த்து கலை வடிவமான வடமோடிக் கூத்துகளின் ஆடல், பாடல்கள் மற்றும் நிகழ்த்துகை நுட்பங்களை எடுத்துக் கொண்டு படச்சட்ட மேடைக்குரிய நவீன நாடகங்களை உருவாக்கிய ஒரு சில நாடக ஆய்வாளர்கள் காலப்போக்கில் வடமோடிக் கூத்தை, ஒரு பக்கப் பார்வையாளர்களுக்கான படச்சட்ட மேடைக்குரிய கூத்து வடிவமாக வியாக்கியானிக்கத் தலைப்பட்டுள்ளார்கள். இப்பின்புலத்தில் வடமோடிக் கூத்தானது வட்டக்களரிக்கேயுரிய பொறிமுறைகளையும், நிகழ்த்துகை நுட்பங்களையும் கொண்டது என்பதை ஆய்வுக் கண்ணோட்டத்துடன் எடுத்துக் காட்ட வேண்டியது தேவையாக உள்ளமையால், இவ்வாய்வுக் கட்டுரை வட்டக்களரிக்கேயுரிய நிகழ்த்து கலையாக மட்டக்களப்பு வடமோடிக் கூத்து இருக்கின்றது என்பதை எடுத்துக்காட்ட விளைகின்றது.
|
முக்கிய வார்த்தைகள்: கூத்துக்களரி, திறந்தவெளி, தாளந்தீர்த்தல், சபையோர், இரட்டித்தல்.
|
துணைநூற்பட்டியல்:
[1] நாடகம் நாட்டாரியற் சிந்தனைகள் கட்டுரைத் தொகுப்பு, தமிழகம் வெளியீடு, தெல்லிப்பளை, 1990
[2] 5th International Symposium 2015 - IntSym 2015, SEUSL சு.சந்திரகுமார் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரை
[3] மேலது..
[4] சீலாமுனைக் கூத்து மீளுருவாக்கம், அனுபவப் பகிர்வு 1, சிவநாயகம்.செ, மூன்றாவதுகண் பதிப்பு, மட்டக்களப்பு, 2007
[5] வித்தியின் தமிழியற் பதிவுகள், சேமமடு பதிப்பகம், 2010
|