மு.வரதராசனின் அகல்விளக்கு நாவலில் குடும்ப பெண்கள் நிலை


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal
Volume-7 Issue-4
Year of Publication : 2025
Authors : Dr. B. Periyaswamy


Citation:
MLA Style: Dr. B. Periyaswamy, "Family Womens status in the Agalvilakku Novel of Mu.Varadharasan" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I4 (2025): 36-44.
APA Style: Dr. B. Periyaswamy, Family Womens status in the Agalvilakku Novel of Mu.Varadharasan, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i4), 36-44.

சுருக்கம்:
மு.வரதராசனின் அகல்விளக்கு எனும் நாவல் ஒரு குடும்ப நாவலாகும். இது ஒரு குடும்பத்தில் உண்டாகும் சிக்கல்களையும், மகிழ்ச்சிகளையும், அக்குடும்ப உறவுகளின் உணர்ச்சிகளையும் அழகாக எடுத்துரைத்துள்ளது. அவற்றுள் பெண்களின் நிலை என்னவாக காட்சிப்படுத்துள்ளது என்பதை இவ்வாய்வுக் கட்டுரை எடுத்துரைக்கின்றது. இதில் திருமணம், வரதட்சணை, ஆணாதிக்கம், குடும்பம், கணவன் மனைவி உறவு, பெண்கல்வி ஆகியவற்றை மையமிட்டு இக்கட்டுரை அமைந்துள்ளது. திருமணம் என்பதை வரதட்சணையே நிர்ணயிக்கின்றது. மாப்பிள்ளை படித்த படிப்பு, வேலை, நிலம் இவற்றை பொறுத்து வரதட்சணை நிர்ணயிக்கப்படுகிறது. பெண் எவ்வளவு நல்லவளாக இருந்தாலும் குணத்தைக் காட்டிலும் வரதட்சணையே முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஆண்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படியே பெண்கள் நடக்க வேண்டும் அதுவே குடும்பத்திற்கு நல்லது என்பதை மணிமேகலை கதாபாத்திரம் மூலம் பேசப்பட்டுள்ளது. குடும்பம் என்பது வீடுகளால் ஆனதல்ல அது ஒன்றிணைந்த மனங்களால் உருவாக்கப்பட்டது. தாய்வழிச் சமூகமாக இருந்த நாம் அரசு உருவாககத்தின் காரணமாக தந்தைவழிச் சமூகமாக மாறிவிட்டோம். கணவன் மனைவியின் விட்டுக் கொடுத்துச் செல்லும் பண்பே குடும்பத்தைக் காக்கக்கூடியது. சிக்கனமே வாழ்க்கையை உயர்த்தக்கூடியது. கணவன் மனைவி உறவில் காதலும் ஊடலும் இணைந்திருக்க வேண்டும். பெண் கல்வியால் ஒருபோதும் தவறாக நடப்பதில்லை. பெண்கல்வியே அவளை உயர்நிலைக்குக் கொண்டு செல்லும் ஆகியவற்றை இக்கட்டுரையில் எடுத்துரைத்துள்ளது.

முக்கிய வார்த்தைகள்:
அகல்விளக்கு, பெண்கள், குடும்பம், வரதட்சணை, கணவன் மனைவி உறவு, சமூகம்.

துணைநூற்பட்டியல்:
[1] Ragavan. A, Pennurimaiyum madhamum, dravidar Kazhaga Veliyedu, Chennai, 2001.
[2] Ganesalingam. S, Penadimaithera, Pari Nilayam, Chennai,1989.
[3] Panjangam. K, Pen-Mozhi-Padaippu, Kaviya, Chennai, 2007.
[4] Prema. R, Pen Viduthalaiyum Pen urimaiyum, Arivu Pathipagam, Chennai, 2008.
[5] Pudhuvai Ganakumaran, Penniya Nokkil Melanmai Ponnusamiin Pudhinangal, Sinthanai Pathipagam, Pudhuchery, 2007.
[6] Mani. T.V.S, Viswanathan.Seeni, (Ed.), Bharathiyar Kavithaigal, Vanavil Prasuram, Chennai, 1977.
[7] Varadharajan. M., Agalvilakku, Pari Nilaiyam, Chennai, 1995.
[8] ....., Pengalin Gavanathirku, Santham Prachara Arakattalai, Vaniyambadi, 2005.