வரலாற்றுச் சிந்தனைகளும் வரலாற்றுப் பாடகற்பித்தல் முறைகளும்-இலங்கை மற்றும் சைப்ரஸ் நாடுகளைமையப்படுத்திய ஆய்வு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal
Volume-7 Issue-4
Year of Publication : 2025
Authors : Nilandhini Senthuran


Citation:
MLA Style: Nilandhini Senthuran, "Historical Thoughts and History Teaching Methods - A Study Focusing on Sri Lanka and Cyprus" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I4 (2025): 45-51.
APA Style: Nilandhini Senthuran, Historical Thoughts and History Teaching Methods - A Study Focusing on Sri Lanka and Cyprus, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i4), 45-51.

சுருக்கம்:
உலகில் வரலாற்றுக்கற்கையானது முக்கியமான பாட அலகாகக்காணப்படுகின்றது. மாணவர்கள் வரலாற்றைதேர்விற்காகமட்டும்கற்காமல், அதனை அடிப்படையாகக் கொண்டுதிறன்களைவளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே இன்றையகல்விக் கொள்கையின் நோக்கமாகமாறியுள்ளது. எனினும், இலங்கையின் தமிழ் வரலாற்றுப் பாடவகுப்பறைகளில் பாரம்பரிய முறையே அதிகமாகப்பின் பற்றப்படுவதனால் மாணவர்களுக்கு வரலாற்றில் ஆழமானபுரிதல் குறைந்து வருகின்றது. இத்தகையசூழலில் தமிழ் வரலாற்றாசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்களைஆராய்வதே இவ்வாய்வின் முக்கிய நோக்கமாக அமைகின்றது. மேலைத்தேயகல்வியியல் உலகில் வரலாறுகற்பித்தல், வரலாற்றுச் சிந்தனை, வினாவல் அடிப்படையிலானகற்றல், ஆவணப் பகுப்பாய்வு, விமர்சனமுறையில் கற்றல் போன்றதிறன்களை மையப்படுத்துகின்றது. உதாரணமாகசைப்ரஸ் நாட்டின் வரலாற்றுப் பாடஅலகுகளைக் குறிப்பிடலாம். இத்தகையதிறன்கள் மாணவர்களின் வரலாற்றுப் புரிதலை ஆழப்படுத்த உதவுகின்றன. இலங்கையின் தமிழ் பாடசாலைகளில், ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி இல்லாமை, வளங்களின் பற்றாக்குறை, மாணவர்களின் தேர்வுமயமான மனப்பாங்கு போன்றகாரணிகள் இப்புதியகற்பித்தல் முறையின் செயற்பாட்டைப்பாதிக்கின்றன. இந்தஆய்வில் கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் அம்பாறைமாவட்டங்களில் உள்ளதமிழ் வரலாற்றாசிரியர்களுடன் கலந்துரையாடல் மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டன. சேகரிக்கப்பட்டதரவுகள் மேலைத்தேயவரலாற்றுக் கற்பித்தல் முறைகள் தொடர்பானபயிற்சிப் பட்டறையில் பெற்றஅனுபவங்களை அடிப்படையாகக் கொண்டுஒப்பீட்டுமுறையில் பகுப்பாய்வுசெய்யப்பட்டது. ஆய்வின் மூலம்,தமிழ் வரலாற்றாசிரியர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சவால்கள், கல்விவளங்களின் குறைபாடுகள்,மாணவர் மனப்பாங்குமற்றும் கற்றல் ஈடுபாட்டை அதிகரிக்கும் சாத்தியமான மாற்று நுட்பங்கள் ஆராயப்பட்டன. எனவே வரலாற்றாசிரியர்கள் வரலாற்றுச் சிந்தனைசார்ந்த கற்பித்தல் நுட்பங்களைவகுப்பறையில் பயன்படுத்தினால், மாணவர்களின் வரலாற்றுப் புரிதல் மற்றும் கற்றல் ஈடுபாட்டினைக் குறிப்பிடத்தக்க முறையில் மேம்படுத்தமுடியும்.

முக்கிய வார்த்தைகள்:
வரலாற்றுச் சிந்தனை, ஆவணப் பகுப்பாய்வு, விமர்சனக்கற்பித்தல், வரலாற்று ஆசிரியர்கள்.

துணைநூற்பட்டியல்:
[1] வரலாறு (2019),கல்விவெளியீட்டுத் திணைக்களம்,தரம்-11
[2] வரலாறு (2014),கல்விவெளியீட்டுத் திணைக்களம்,தரம்-10
[3] வரலாறு: ஆசிரியர் யையேடு, (2018),தேசியகல்விநிறுவகம்,மகரகம்
[4] வரலாறு: ஆசிரியர் யையேடு,(2010),தேசியகல்விநிறுவகம்,மகரகம்
[5] Peter Seixas, Tom Morton (2013), The Big Six: Historical Thinking Concepts, Nelson Education
[6] Dean Smart, Kemal Asik and Evie Grouta, Ceyda Alcicioglu and Georgia Nicolaou(2021), Cyprus A Classroom without Walls, Kailas Printers and Lithographers, Nicosia, Cyprus, Vol:I& II
[7] Maria Georgiou, Melak Kaptanoglu (2024), History Education in Cyprus, Kailas Printers and Lithographers.
[8] Chapman, A. & Haydn, T. (eds.) 2016. Teaching History in the Twenty-First Century. London: Routledge.
[9] Wineburg, Sam (2001). Historical Thinking and Other Unnatural Acts, Philadelphia: Temple University Press.