குருதிமலை நாவலும் முல்லோயாப் போராட்டமும்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal
Volume-7 Issue-4
Year of Publication : 2025
Authors : N. Sudarshini


Citation:
MLA Style: N. Sudarshini, "The novel Kurudimalai and the Mulloya struggle" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I4 (2025): 52-58.
APA Style: N. Sudarshini, The novel Kurudimalai and the Mulloya struggle, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i4), 52-58.

சுருக்கம்:
பல்வேறு விதமான பொதுநோக்கங்களை அடையும் பொருட்டு உருவான தொழிலாளர் அமைப்பே தொழிற்சங்கங்கள் எனப்படுகின்றன. இவை மலையக மக்களின் வாழ்க்கையிலும் இன்றிமையாத பாகமாக விளங்குகின்றன. மலையக மக்கிளின் தொழிற்சங்க நடவடிக்கைகளில் முல்லோயாப் போராட்டம் மிகவும் இன்றிமையாதது. இதன் காரணமாக மலையகம் சார்ந்த இலக்கியங்களிலும் இது பற்றிய குறிப்புகள் விரவிக்காணப்படுகின்றன. ஐரோப்பியரின் வருகையினால் தமிழுக்குக் கிடைத்த இலக்கிய வடிவங்களில் ஒன்றான நாவல்இ தனிமனித வாழ்வியலை படம்பிடித்துக் காட்டுவதைக் காட்டிலும் ஒரு சமூகம் தொடர்பான கருத்தியலை உலகுக்கு படம் பிடித்துக் காட்டும் ஒருவகை புனைகதை இலக்கியமாகும். இதனால், நாவல்கள் சமுதாயத்தின் சரித்திரங்கள் எனப்படுகின்றன. இவ்வகையில், மலையக மக்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாககத் திகழும் தொழிற்சங்கங்கள் பற்றியும், முல்லோயப் போரட்டம் குறித்தும் வெளிப்படுத்தும் வகையில் படைக்கப்பட்ட நாவல்கள் பலவுள்ளன. இவற்றுள், தி. ஞானசேகரனால் படைக்கப்பெற்ற ‘குருதிமலை’ நாவலும் ஒன்றாகும். 1940களில் முல்லோயாவில் இடம்பெற்ற தொழிற்சங்கப் போராட்டத்தில் உயிர்நீத்த கோவிந்தன் பற்றியும், அவர் மரணம் மலையக மக்களின் வாழ்வில் ஏற்படுத்தி விளைவுகளையும் கண்ணுற்றதன் விளைவாய் உருவான குருதிமலை நாவல் தொழிற்சங்க வரலாறு குறித்தும், அத்தொழிற்சங்கங்களின் செயற்பாடுகள், போராட்டங்கள் குறித்தும் பல விடயங்களை வெளிப்படுத்துகின்றது. இவற்றுள் முல்லோயாப் போராட்டம் குறித்த வெளிப்பாடுகள் தனித்துவமானவையாகக் காணப்படுகின்றன. இவ்வடிப்படையில், இந்நாவலினூடாக வெளிப்படுத்தப்படும் முல்லோயப் போராட்டம் குறித்த வெளிப்பாடுகளைப் பற்றி அறியும் நோக்குடனேயே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

முக்கிய வார்த்தைகள்:
குருதிமலை, தேசியமயமாக்கம், தொழிற்சங்கங்கள், பெருந்தோட்டங்கள், மலையகம், முல்லோயாப் போராட்டம்.

துணைநூற்பட்டியல்:
[1] அந்தனி ஜீவா: 2005, ‘’மலையகத் தொழிற்சங்க வரலாறு’’, கண்டி, த.பெ எண் 32, மலையக வெளியிட்டகம்.
[2] எழுநர்: 2023, ‘’பெருந்தோட்டங்கள் அரசுடமையாக்கம்.’’
[3] சரவணன். என்: 2023, ‘’மலையகத் தேசிய அடையாளத்தின் பரிணாமங்களும், பரிமாணங்களும்.’’
[4] ஞானசேகரன் .தி: 1979, ‘’குருதிமலை’’, கொழும்பு, வீரசேகரி வெளியீடு
[5] மாத்தளை - ரோகிணி, 1993, உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள், கொழும்பு: குறிஞ்சி வெளியீடு
[6] ஸரீபன் .ஜே.ஜி: 2023, ‘’மலையக அரசியல் வரலாற்று வளர்ச்சியும் முன்னகர்த்த வேண்டிய பணிகளும்.’’
[7] சுப்பிரமணியம்.நா.,(1988)) 1978-க்குப் பின் ஈழத்தின் தமிழ் நாவலிலக்கியம், மல்லிகை இதழ், இதழ்-213