திரிகடுகத்தில் பிறவித்துயர் தீர்க்கும் நெறிகள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal
Volume-7 Issue-4
Year of Publication : 2025
Authors : M Muvin


Citation:
MLA Style: M Muvin, "The rules for resolving the birth of the seed in the Trikaduka" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I4 (2025): 59-66.
APA Style: M Muvin, The rules for resolving the birth of the seed in the Trikaduka, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i4), 59-66.

சுருக்கம்:
பூமியில் உயிரினங்கள் அனைத்தும் பிறக்கின்றன பின்னர் இறக்கின்றன. எல்லா உயிரினங்களுக்கும் பிறந்ததன் நோக்கத்தை அறிய வேண்டிய உயிரியல் தேவை இல்லை ஏனெனில் அவை உடலியல் சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கின்றன. உதாரணமாக, பறவை, விலங்கு போன்ற உயிரினங்களுக்கு பசிக்கும் போது உணவைத் தேடுவதும், காமம் என்ற உணர்வின் போது மற்றொரு உயிரைத்தேடுவதும் இயல்பாக நிகழ்கின்றன. இதே உடலியல் உணர்வு தான் மனிதனையும் இயக்குகின்றது எனும் போது இந்த உணர்வையும், ஏன்பிறந்தோம் என்றும் சிந்திக்கவைக்கிறது அவனது உயிர் பற்றிய அறிவு. இவ்வறிவு தான் துன்பங்கள் அதிகமாகும் போது, மனிதப்பிறவியே இல்லாமல் இருந்திருக்கலாம் அல்லது எதற்கு இந்தப் பிறவி பற்றிய எடுத்தோம் என்ற பிறவி சிந்தனையைமனிதனுக்குள் உருவாக்குகிறது. அறிவியல் ரீதியில் அணுக்களின் பெரும் கூட்டமைப்பு மனித உடல். ஆன்மீகரீதியில் ஆண்டவனின் படைப்பு மனித உடல். ஆனால் இந்த உடலை இயக்கும் உயிர் எங்கிருக்கிறது, எப்படி இருக்கும், ஏன்பிறந்தோம், முற்பிறவி, அடுத்த பிறவி உண்டா, என்றைக்கு உயிர் உடலை விட்டுப்பிரியும் என்ற அறிவை மனிதனால் பெற முடியாது என இந்தப் பிரபஞ்சம் பிறவி பற்றிய இரகசியங்களை மறைத்தே வைத்திருக்கிறது. தமிழ் இலக்கியங்களில் சான்றோர்கள் பிறவியென்பது துன்பம் தருவது என்றும், பிறவியில்லாப்பெருவாழ்வுபேரின்பமிக்கது என்றும் வலியுறுத்தியுள்ளனர். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திரிகடுகம் கூறும் பிறவித்துயர்தீர்வதற்கான நெறிகளை இக்கட்டுரை ஆராய்கிறது.

முக்கிய வார்த்தைகள்:
பிறவி, உயிர், உடல், அறம், அன்பு, உயர்கதி, நன்னெறிகள்.

துணைநூற்பட்டியல்:
[1] ஞானேசுவரர், நமக்கேனிந்தமானிடப்பிறவி, கிரிடிரேடிங்ஏஜென்சி பிரைவெட்லிமிடெட், சென்னை, 2021
[2] மாணிக்கவாசகன். ஞா, சிறுபஞ்சமூலம்(மூலமும்உரையும்), உமாபதிப்பகம், சென்னை, 2021
[3] மாணிக்கவாசகன். ஞா, திரிகடுகம்(மூலமும்உரையும்), உமாபதிப்பகம், சென்னை, 2022
[4] முனைவர்கதிர்முருகு, நீதிவெண்பா(மூலமும்உரையும்), சாரதாபதிப்பகம், சென்னை, 2013
[5] ஹெலினா. தே, திருக்குறள்புதியஉரை, விதைவெளியீடு, ஈரோடு, 2016