| நற்றிணையில் இறை நம்பிக்கை சார்ந்த எச்சங்கள் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal Volume-7 Issue-4 Year of Publication : 2025 Authors : Mr. P A Mohamed Adhil Murshidh |

|
Citation:
MLA Style: Mr. P A Mohamed Adhil Murshidh, "Religious relics in the cemetery" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I4 (2025): 67-74.
APA Style: Mr. P A Mohamed Adhil Murshidh, Religious relics in the cemetery, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i4), 67-74.
|
சுருக்கம்:
சங்க இலக்கியத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று அகம், புறம் என்னும் பாடுபொருள் திறமாகும். புறப்பாடல்களைக் காட்டிலும் அகப்பாடல்களே மிகுதியாக உள்ளன. இவற்றில் நற்றிணை என்னும் தொகைநூல் முதலாவதாக வைத்து எண்ணப்படுகிறது. அகவற்பாவால் ஆன இந்நூல் அமயப்பெற்ற இந்நூல் நானூறு பாடல்களைக்கொண்டு சிறப்புற்று விளாங்குகிறது. சங்க காதல் இலக்கியங்கள் அனைத்தும் காதலுக்கே முன்னுரிமை கொடுக்காமல் புறச்செய்திகளில் குறிப்பாக இறை வழிபாடுகளில் சிவன், முருகன், திருமால், இயற்கை, கதிரவன், மலைவழிபாடு, பேய் குறித்த செய்திகளையும் விரிவாகச் சுட்டுகிறது. அதனடிப்படையில் நற்றிணையில் இறை நம்பிக்கை சார்ந்த எச்சங்கள் என்னும் தலைப்பில் இக்கட்டுரை விளக்க முற்படுகிறது.
ஒவ்வொரு காலத்தில் வாழ்ந்த மக்கள், தங்களின் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்றவாறு பல வழிபாட்டு முறைகளைக் கொண்டிருந்தனர். அவ்வகையில் முருகன், திருமால் போன்ற தெய்வங்கள், சிறு தெய்வ வழிபாடு. பேய், முதலானவற்றில் சங்க கால மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளை நற்றிணை பாடல்கள் வழியாக அறிய முடிகின்றது. “எந்த நம்பிக்கையை மனிதம் விரும்பித் தேர்ந்து செயல்படுகிறானோ அந்த நம்பிக்கைகளே விழுமியங்களாகும்” (சிவப்பிரகாசம்.கு, புறநானூற்றில் வாழ்வியல் விழுமியங்கள், ப.107) என விளக்கம் தருகிறார்.
|
முக்கிய வார்த்தைகள்: ஒன்று, அகம், புறம், புறப்பாடல், அகப்பாடல், நற்றிணை, சிவன், முருகன், திருமால், இயற்கை, கதிரவன்.
|
துணைநூற்பட்டியல்:
[1] நாராயணசாமி ஐயர். பின்னத்தூர், நற்றிணை நானூறு, கழக வெளியீடு, சென்னை, நான்காம் பதிப்பு: 1967.
[2] அண்ணாமலை.வே, சங்க இலக்கியத் தொன்மக் களஞ்சியம், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், முதற்பதிப்பு: 2000.
[3] வேங்கடசாமி நாட்டார் ந.மு, கார் நாற்பது உரை, சாரதா பதிப்பகம், சென்னை.முதற்பதிப்பு 2015.
[4] வரதராசனார். மு, திருக்குறள் தெளிவுரை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. முதற்பதிப்பு 2014.
[5] சிவசுப்பிரமணியன்.ஆ, மந்திரமும் சடங்குகளும், மக்கள் வெளியீடு, சென்னை, முதற்பதிப்பு: 1999.
[6] சுப்பிரமணியன். ச. வே, கம்பராமாயணம் மூலமும் உரையும், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600 108. முதற்பதிப்பு 2006.
|