| முஸ்லிம் பெண்தாதியர்கள் பணிச்சூழலில் எதிர்நோக்கும் சவால்கள்: சம்மாந்துறைப் பிரதேசத்தை மையப்படுத்திய ஓர் ஆய்வு | ||
![]() |
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) © 2025 by IRJTSR Journal Volume-7 Issue-4 Year of Publication : 2025 Authors : S.Fathima Nusaira, M.L.Mohamed Helfan, A.L.M.Mujahid |
|
| Citation: MLA Style: S.Fathima Nusaira, M.L.Mohamed Helfan, A.L.M.Mujahid, "Challenges Faced by Muslim Women Nurses in the Workplace: A Study Focusing on the Sammanthurai Region" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I4 (2025): 89-99. APA Style: S.Fathima Nusaira, M.L.Mohamed Helfan, A.L.M.Mujahid, Challenges Faced by Muslim Women Nurses in the Workplace: A Study Focusing on the Sammanthurai Region, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i4), 89-99. |
||
| சுருக்கம்: இலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப்பிரதேசமானது குறிப்பிடத்தக்களவு முஸ்லிம் பெண்தாதியர்களை சுகாதாரத்துறைக்கு வழங்கும் ஒரு முக்கிய பிரதேசமாகக்காணப் படுகின்றது. இப்பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்தாதியர்கள் தமது தொழில்சார் சூழலிலும் சமூக மற்றும் குடும்பவாழ்விலும் எதிர் நோக்கும் பன்முகப்படுத்தப் பட்டசவால்களை விரிவாக ஆராய்வதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். இவ்வாய் வானது பண்புசார் மற்றும் அளவுசார் (Mixed Method Research) அணுகு முறைகளை ஒன்றிணைத்து மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுத்தரவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக எழு மாற்று மாதிரி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 30 பெண்தாதியர்களுக்கு வினாக் கொத்துக்கள் வழங்கப்பட்ட தோடு, ஆழமான புரிதலுக்காக 10 தாதியர்களிடம் நேர்காணல்களும் மேற்கொள்ளப்பட்டன. சேகரிக்கப்பட்டதரவுகள் Excel மென்பொருள் உதவியுடனும், பண்புசார்தரவுகள் கருப்பொருள் பகுப்பாய்வு (Thematic Analysis) முறையினூடாகவும் வகைப்படுத்தப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டன. ஆய்வின் பிரதானகண்டறிதல்களின் படி, முஸ்லிம் பெண்தாதியர்கள் தமது பணிநிலையங்களில் இஸ்லாமியவரையறைகளுக்குட்பட்ட முழுமையான ஆடை முறையைப்பின்பற்றுவதில் பாரியதடைகளை எதிர் நோக்குகின்றனர். இது அவர்களதுதனிப்பட்டமன உளைச்சலுக்குக் காரணமாக அமைவதுடன், சமூகரீதியான எதிர்மறைவிமர்சனங்களுக்கும் உள்ளாக்குகின்றது. மேலும், சுழற்சி முறையிலான இரவு நேரப்பணிகள் அவர்களது குடும்ப வாழ்வியலில் பாரியதாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, கணவன் மற்றும் பிள்ளைகளுடன் செலவழிக்க வேண்டிய நேரத்தைக் குறைத்துள்ள தோடு, பிள்ளைகளின் கல்வி மற்றும் ஒழுக்க மேம்பாட்டில் போதியகவனம் செலுத்த முடியாமையையும் தோற்று வித்துள்ளது. தொழில்ரீதியாக, பண்டிகைக்கால மற்றும் அவசரகால விடுமுறைகளைப் பெற்றுக்கொள்வதில் உள்ள நிர்வாகச்சிக்கல்கள், சுகயீனமான நிலையிலும் சேவையாற்ற வேண்டிய கட்டாயச் சூழல் மற்றும் பணிச்சுமையால் அடிப்படை மார்க்கக்கடமைகளை உரிய நேரத்தில் நிறை வேற்ற முடியாமை போன்ற விடயங்கள் இவர்களது பணித்திருப்தியைப் பாதிக்கும் காரணிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. ஒட்டு மொத்தமாக, சம்மாந்துறைபிரதேச முஸ்லிம் பெண்தாதியர்கள் தமது மார்க்கவிழுமியங்களுக்கும் தொழில்சார் பொறுப்புகளுக்கும் இடையில் ஒரு சமநிலையைப் பேணுவதில் பெரும் போராட்டத்தை எதிர் கொள்கின்றனர் என்பதை இவ்வாய்வு புலப்படுத்துகின்றது. |
||
| முக்கிய வார்த்தைகள்: முஸ்லிம் பெண்தாதியர்கள், சுகாதாரத்துறை, தொழில்முறைசவால்கள், மதக்கடமைகள், பணித்திருப்தி, சம்மாந்துறை. |
||
| துணைநூற்பட்டியல்: [1] Hassan, M. H. (2020). Female Muslim working as a nurse in Singapore. Haniff. SG. link [2] Neeyindri amayathu ulahu [The world cannot survive without you]. (2016, May 12). [Video]. Puthiya Thalaimurai TV. link [3] Puniyameen. (2009). Sarvathesa thathiyar thinam [International Nurses Day]. Oneindia Tamil. link [4] Riyas, J.M.M. (2016). Vaiththiyarhalin uthaviyalarhale thathiyar enbathu palaya karuthukol [Nurses are the old term for doctors' assistants]. link [5] Suhaima, M.R.J., Mazahir, S.M.M., & Abdullah, M.M.A. (2022). Sirupanmai soolamaivil Muslim pengal thathiyarhalaha pani purithal: Oor islamiya sattaviyal pahuppaivu [Muslim women’s employment as nurses in the modern health sector: A study based on urban Islamic society]. Malaysian Journal of Social Sciences and Humanities (MJSSH), 7(3), e001317. link [6] Team, I. (2023). 15 challenges of being a nurse and how to overcome them. Indeed. link [7] Thoothu. (2018, January 21). Navēna maruthuva ariviyal- Muslimgalin pangalipu [Modern medical science - Muslims’ contribution]. link |
||

