| குசலானமலையடிவார மக்களின் வாழ்வியல் -ஓர் ஆய்வு |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal Volume-7 Issue-4 Year of Publication : 2025 Authors : M. Daniel |

|
Citation:
MLA Style: M. Daniel, "The lifestyle of the people of Kusalana Mountain Foothills - A study" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I4 (2025): 100-105.
APA Style: M. Daniel, The lifestyle of the people of Kusalana Mountain Foothills - A study, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i4), 100-105.
|
சுருக்கம்:
மனித வாழ்வியலானது பண்பாட்டினை முன்னிலைப்படுத்தியதாக நகர்ந்து கொண்டு செல்கிறது. ஒரு சமூகம் அல்லது குறித்த இனம் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வருகின்ற சமயம், கலைகள், நம்பிக்கைகள், சடங்குகள், விழாக்கள் போன்றனவும் குறித்த சமூகத்தில் அங்கத்தவராக இருக்கும் ஒருவர் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்கின்ற பிற திறமைகளும் பண்பாடு எனப் பொதுவாகக்கூறப்படுகின்றது. ஒரு இனத்தின் அல்லது சமூகத்தின் வாழ்வியலை விளங்கிக்கொள்ளும் அளவுகோலாக பண்பாட்டினைக் குறிப்பிடமுடியும். அந்தவைகையில் குசலானமலை மக்களுடைய வாழ்வியலை விளங்கிக்கொள்வதற்கு அவர்களுடைய பண்பாடு துணைநிற்கிறது. ஏனைய பிரதேசத்து மக்களது வாழ்வியலோடு ஒப்பிடுகையில் குசலானமலை மக்களது வாழ்வியல் தனித்துவமுடையதாக விளங்குகின்றது. அந்தவைகையில்குசலானமலை மக்களின் வாழ்வியலில் பொதிந்துள்ள தனித்துவமான பண்பாட்டு அம்சங்களை ஆய்வு செய்வதாக இவ்வாய்வு அமைகின்றது.குசலானமலை மக்களின் சமயம், நம்பிக்கைகள், மொழி, பழக்கவழக்கங்கள், மரபுகள், கலைகள், சமூக அமைப்புக்கள் போன்றவற்றினை ஆய்வு செய்வது இவ்வாய்வின் நோக்கமாகும். இவ்வாய்வில் இரண்டு முறைகளில் தரவு சேகரிக்கப்படுகின்றது. முதல் நிலைத் தரவாக ஆய்வாளரின் நேரடி அவதானம், பங்குபற்றல், நேர்காணல் என்பன அமைகின்றன. இரண்டாம் நிலைத்தரவாக பத்திரிகைகள், சஞ்சிகைகள், புத்தகங்கள், இணையங்கள் போன்றன பயன்படுத்தப்படுகின்றன.
|
முக்கிய வார்த்தைகள்: பண்பாடு, சமூகம், வாழ்வியல், குசலானமலை மக்கள், நடைமுறைகள்.
|
துணைநூற்பட்டியல்:
[1] கணபதிப்பிள்ளை. கே, வயது 80, கிராமவாசி, குசலானமலை, 11.10.2025
[2] மெனிக்;கா. கே, வயது 76, கிராமவாசி, குசலானமலை, 14.10.2025
[3] இராசதுரை. மு,வயது79, கிராமவாசி, குசலானமலை, 23.10.2025
[4] பூமணி. அ,வயது 69,கிராமவாசி, குசலானமலை, 01.11.2025
[5] வித்தியாசங்கர். அ,வயது 40, கிராம அபிவிருத்திச்சங்க தலைவர், கரடியன்குளம், 05.11.2025
[6] சன்முகலிங்கம். மு,வயது 51,அதிபர், ஏறாவூர், 20.11.2025
[7] கமலாவதி,வயது 46, கரடியன்குளம், 04.12.2025
[8] காளிப்பிள்ளை.க,வயது 54,கிராமவாசி, குசலானமலை, 13.11.2025
[9] அன்டனிஜெயசந்திரன்.இரா,வயது 55, கொழும்பு, 07.12.2025 (தொலைபேசி வாயிலான நேர்காணல்.)
|