மட்டக்களப்பின் கைவினைமரபுகளில் காலனியம் ஏற்படுத்தியதாக்கங்களும், அவைபாதுகாக்கப்பட வேண்டிய தேவைப்பாடுகளும்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2026 by IRJTSR Journal
Volume-8 Issue-3
Year of Publication : 2025
Authors : Mrs. Prashanthi ilango


Citation:
MLA Style: Mrs. Prashanthi ilango, "The impact of colonialism on the craft traditions of Batticaloa, and the need for their preservation" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V8.I3 (2026): 6-24.
APA Style: Mrs. Prashanthi ilango, The impact of colonialism on the craft traditions of Batticaloa, and the need for their preservation, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v8(i3), 6-24.

சுருக்கம்:
ப16ஆம் நூற்றாண்டளவில் உலகநாடுகளிடையேபெரும் தாக்கங்களை ஏற்படுத்திய செயல்வாதமாகக் காலனித்துவம் காணப்படுகிறது. இதன்கீழ் கி.பி.1505 – 1948 வரை இலங்கையும் காலனியஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்படுகின்றது. தமது நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக ஐரோப்பிய ஆட்சியாளர்கள் காலனியநாடுகளின் மேல் கட்டமைத்துக் கொண்டசிந்தனைப்போக்குகள் காலனித்துவச் செயற்பாடுகளுக்குகாலாயின. இந்தச் செயற்பாடுகளின்மையமாகப் பொருளாதாரச் சுரண்டல் காணப்பட்டது. காலனிக்குடி நாடுகளிலிருந்து பொருளாதாரநன்மைகளை பெற்றுக் கொள்வதேகாலனிய ஆட்சியாளர்களின் பிரதானநோக்கமாககாணப்பட்டது. பல்வகைவளச்செறிவு கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதானபொருளீட்டல் செயன்முறைகளில் ஒன்றாகக் கைவினைத் தொழில்கள் சிறப்புடன் வளர்ந்துவந்துள்ளன. இலங்கையின் கைவினைப் பாரம்பரியம் காலனித்துவபொருளாதாரக் கொள்கைகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டபோது மட்டக்களப்பின் கைவினைப் பாரம்பரியத்திலும் இதன் தாக்கங்களைக் காணமுடிகின்றது. காலனித்துவக் கருத்தியல்கள் மட்டக்களப்பின் கைவினைமரபுகள் மீது ஏற்படுத்தியசாதக, பாதகமானதாக்கங்களை அடையாளப்படுத்துவதுடன் அவற்றைப் பாதுகாப்பதற்கான வழி முறைகளைத் தேடுவதும் இவ்வாய்வின் பிரச்சனைகளாக அமைந்துள்ளன. இவ்விடயங்கள் இதுவரைவிரிவான ஆய்விற்கு உட்படுத்தப்படவில்லை. இதன் கீழ் காலனித்துவஆதிக்கத்திற்கு முன்னர் மட்டக்களப்பின் கைவினைமரபுகளின் நிலை, காலனிய ஆட்சிக்காலத்தில் அவற்றில் ஏற்பட்டதாக்கங்கள், காலனிய சூழலுக்குப் பின்னரானகைவினைகளின் நிலை, காலனியத் தாக்கங்களிலிருந்து இவற்றைபாதுகாக்க வேண்டிய தேவைகள் என்பன இவ்வாய்வின் நோக்கங்களாக அமைகின்றன. இவ்வாய்வுகைவினைப் பொருட்களைப் பற்றியதாக அமைவதால் இங்கேபண்புசார் ஆய்வு முறை பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாய்வில் முதல் தர மூலங்களாக கள ஆய்வின் நேரடி அவதானம், ஆள்நிலை நேர்காணல் (ஐn – னநிவா ஐவெநசஎநைறள)இகுழுநிலைக் கலந்துரையாடல் (குழஉரள பசழரி னளைஉரளளழைn) தகவல்கள் என்பனவும், இரண்டாம் தரதரவுகளாக ஆய்வுகள், சஞ்சிகைகள், வலைதளக் கட்டுரைகள் (னுயவய டியளந) என்பனவும் அடங்கும். இவ்வாய்வு காலனித்துவசெயற்பாடுகள் கைவினைகளில் ஏற்படுத்தியதாக்கங்களை விளக்க முற்படுகின்றது. காலனித்துவகருத்தியல்கள் மட்டக்களப்பின் கைவினைமரபுகளில் அறிவியல் தொழில்நுட்பரீதியாக சில சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் அதேவேளை அதன் பாரம்பரியமரபுகளில் பாதகமான மாற்றங்களையும் ஏற்படுத்தி உள்ளன என்பதும் அவற்றின் மரபுகள் பாதுகாக்கப்பட்டு நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்றது போல் மாற்றியமைக்கப் பட வேண்டும் என்பதும் இவ்வாய்வின் முடிவாக அமைகின்றது.

முக்கிய வார்த்தைகள்:
காலனித்துவம், கருத்தியல்கள், பாரம்பரியம், கைவினைமரபுகள்.

துணைநூற்பட்டியல்:
[1] Ananda K,Coomaraswamy.(1956) Medieval Sinhalese Art, New York:pantheon books inc.
[2] Paul Goodman,and Frank Otto Gatel, (1970) The American Colonial Experience.Rinchart&Winston.Inc: London.
[3] சதானந்தன்,த.,ஆயி~hஅப்தூர் ரஃமான்.(Eds.), Tradition or Trans/ Formation? Craft, Practice and Discourse (gf;.194-195).நுண்கலைத்துறை:யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். யாழ்ப்பாணம்.
[4] தங்கேஸ்வரி,க.(2007) கிழக்கிலங்கைப் பூர்வீகவரலாறு. சென்னை:மணிமேகலைப் பிரசுரம்.
[5] தங்கேஸ்வரி,க.(2007) மட்டக்களப்புகலைவளம். சென்னை:மணிமேகலைப் பிரசுரம்.
[6] வெல்லவூர்க் கோபால்.(2005) மட்டக்களப்புவரலாறுஓர் அறிமுகம்.மட்டக்களப்பு: மனுவேதாபதிப்பு.
[7] நவரெத்தினம்,கு. (2007) இலங்கையில் கலைவளர்ச்சி. கொழும்பு-சென்னை:குமரன் புத்தக இல்லம்.