மட்டக்களப்பு வரலாற்றில் தர்மரத்னம் வன்னியனார்-ஒரு வரலாற்றுப்பார்வை


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2026 by IRJTSR Journal
Volume-8 Issue-3
Year of Publication : 2025
Authors : Nilanthini Senthooran


Citation:
MLA Style: Nilanthini Senthooran, "Dharmaratnam Vanniyanar in the History of Batticaloa: A Historical Perspective" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V8.I3 (2026): 25-32.
APA Style: Nilanthini Senthooran, Dharmaratnam Vanniyanar in the History of Batticaloa: A Historical Perspective, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v8(i3), 25-32.

சுருக்கம்:
20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மட்டக்களப்பின் வரலாற்றுப் புலத்தில் ஒரு நிலக்கிழாராகவும், மக்கள் பிரதிநிதியாகவும், பாரம்பரிய சமூகத் தலைவராகவும் விளங்கிய தர்மரத்னம் வன்னியனாரின்(1920) வரலாற்றுப் பங்களிப்பினை ஆவணப்படுத்துவதை இவ்வாய்வு முதன்மை நோக்காகக் கொண்டுள்ளது. வரலாற்று ரீதியாக மத்தியகால வன்னியர் மரபு, பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் வெறுமனே கௌரவப் பதவியாக மாற்றமடைந்த சூழலில்,தர்மரத்னம் வன்னியனார் எவ்வாறு தனது பாரம்பரிய நில மேலாண்மை உத்திகளையும், அரசியல் பிரதிநிதித்துவத்தையும் பயன்படுத்தி மட்டக்களப்பின் விவசாய மறுமலர்ச்சிக்கும் சமூகக் கட்டமைப்பிற்கும் வலுவான அடித்தளமிட்டார் என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது. பண்புசார் ஆய்வு அணுகுமுறையைப் பின்பற்றி எழுதப்பட்டுள்ள இக்கட்டுரையில் காலனித்துவகாலக் குறிப்புகள், அரச வர்த்தமானி(1940), பாராளுமன்ற இரங்கல் உரை(எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் உரை), இலக்கிய ஆதாரங்கள் மற்றும் மன்னன்குளத்தில்மேற்கொள்ளப்பட்ட களவாய்வு,நேர்காணல்கள் மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டன. 1938ஆம் ஆண்டு தொடக்கம் 1943ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ‘மட்டக்களப்பு தெற்கு’ தொகுதியின் அரசுச்சபை உறுப்பினராகப் பணியாற்றிய தர்மரத்னம் வன்னியனார்,சமகாலத்தில் விவசாய அமைச்சராகவிருந்த டி.எஸ்.சேனநாயக்க மற்றும் அவசரகால உதவி அரசாங்க அதிபர் டாக்டர் ஏ.எம்.ஏ.அஸீஸ் ஆகியோருடன் இணைந்து, இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ளப் பெரும் பங்காற்றியுள்ளார். 1943இல் கல்முனையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறுவடைத் திருவிழா, யானை ஊர்வலம், தமிழ்-முஸ்லிம் சமூகங்களின் பிணைப்பு, அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி,பாடசாலைகளுக்கு நிலங்களை தானமாக வழங்கியமை, போக்குவரத்து வளர்ச்சிக்காக பல மரப் பாலங்களை அமைத்தமை மற்றும் பிற்கால ‘கல்ஓயாத் திட்டத்திற்கு’ (புயட ழுலய ளுஉhநஅந) முன்னோடியாகத் திகழ்ந்தமை போன்ற பல சான்றுகளை இக்கட்டுரை வெளிக்கொணர்கிறது. உதிரியான தரவுகளாகவும் வாய்மொழித் தகவல்களாக மாத்திரமே காணப்பட்ட வன்னியனார் பற்றிய வரலாற்றுத் தகவல்களை ஒருங்கிணைத்து, மட்டக்களப்பின் விவசாய, சமூக வரலாற்றுப் பக்கங்களில் அவரது ஆளுமையை நிலைநிறுத்த இக்கட்டுரை வழிவகுக்கின்றது.

முக்கிய வார்த்தைகள்:
வன்னியனார், மட்டக்களப்பு, நில மேலாண்மை, விவசாய மறுமலர்ச்சி, அரசுச்சபை.

துணைநூற்பட்டியல்:
[1] The Ceylon Government Gazette (1940.7.06), Government Printers.
[2] Vote of condolence: Mr. S. Dharmaretnam, 25 September 1952:186
[3] Mannankulam Estate Report, 2023.
[4] The Daily News - 29.3.1943
[5] The Observer - 29.3.1943
[6] JameelS.H.M. Kalmunai Era Contribution to Eastern Development 65 Years Ago May 10, 2011
[7] Canagaratnam. S.O.(1921) Monograph of the Batticaloa District of the Eastern Province of Ceylon.
[8] சலீம்.ஏ.ஆர்.எம்.(1997). அக்கரைப்பற்று வரலாறு, அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம்.
[9] கந்தையா. வி.சி.(1965).மட்டக்களப்புத் தமிழகம், சுன்னாகம், திருமகள் அழுத்தகம்,
[10] பத்மநாதன்.சி.(2002).இலங்கைத் தமிழர் தேசவழமைகளும் சமூக வழமைகளும். குமரன் புத்தக இல்லம்