| மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் வாழ்வியலில் அறபுமொழிச் செல்வாக்கு ஜுனைதா ஷெரீப்பின் சாணைக்கூறை நாவலைதுணையாகக் கொண்டஆய்வு |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2026 by IRJTSR Journal Volume-8 Issue-3 Year of Publication : 2025 Authors : Latheef Mohamed Hasmathullah |

|
Citation:
MLA Style: Latheef Mohamed Hasmathullah, "The Influence of the Arabic Language on the Lifestyle of Muslims in the Batticaloa District: A Study Based on Junaitha Sheriff’s Novel *Saanai-koorai*" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V8.I3 (2026): 45-52.
APA Style: Latheef Mohamed Hasmathullah, The Influence of the Arabic Language on the Lifestyle of Muslims in the Batticaloa District: A Study Based on Junaitha Sheriff’s Novel *Saanai-koorai*, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v8(i3), 45-52.
|
சுருக்கம்:
மொழி என்பது கருத்துப்பரி மாற்றத்திற்கான ஊடகம். அந்த ஊடகம் எப்போதும்யதார்த்தநிலையில் தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்பட வேண்டும். மொழியின் இறுதி இலக்கு இலக்கியபடைப்புக்களாகும். நாவல் அதில் அற்புதமான தொருவடிவமாகும். அது சமூக மொன்றின் குரலாக மாறும் போது அதன் வீரியம்பன்மடங்காகும். கிழக்கிலங்கையின் மட்டக்களப்புமாவட்டத்தைச்சேர்ந்தஎழுத்தாளர் ஜுனைதா ஷெரீப் பதின்னான்கு நாவல்களையும், ஐந்து சிறுகதைத் தொகுப்புக்களையும் மற்றும் ஒரு வானொலி நாடகத் தொகுப்பையும் அச்சு வாகனம் ஏற்றியுள்ளார். அவருடையநாவல்களில் 1985களில் வெளியிடப்பட்டதே "சாணைக்கூறை" நாவலாகும் .இந்நாவலில்அறபுமொழிச்சொற்கள்பலகலந்துள்ளன. இவ்வாய்வு, மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் வாழ்வியலில் காணப்படும் அறபுமொழிச்சொற்களை கண்டறிதலும், பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடியைப் பயன்படுத்தி அச்சொற்களுக்கான சரியான தமிழ் வடிவம், மொழிபெயர்ப்பு மற்றும் அச்சொற்களை பாவிப்பதற்கு தூண்டப்படுகின்ற காரணங்களை இனங்கண்டுவெளிக்கொணர்தல் ஆகியநோக்கங்களைகொண்டுள்ளது. அந்தவகையில்குறித்தநூலில் 64 அறபுச்சொற்கள் உள்ளமைகண்டறியப் பட்டுள்ளது. இச்சொற்களை மூன்று பகுதிகளாகவகுக்கமுடியும். ஒன்றுநபரொருவருக்குபெயராகசூட்டபட்டவை, இரண்டு அன்றாடவாழ்வில் பின்னிப்பிணைந்து காணப்படுபவை, மூன்றுவாய் மொழிப்பாடல்களில் காணப்படுபவையாகும். அறபு மொழிச் செல்வாக்கானதுசமய, பொருளாதார, மத்ரஸாகல்விமுறை, தஃவாஇயக்கங்கள், மரபுசார்காரணிகளினால் ஏற்படுகின்றமைகண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வறபு மொழிச்சொற்களைமட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள், முஸ்லிம் - முஸ்லிம் என்ற நிலையில் தங்களுக்குள் தொடர்பாடல் ஊடகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றஅதேவேளை, தங்களுக்குள் பெயர்களாய் வைத்துள்ள சொற்களை தவிர்த்து ஏனைய சொற்களை முஸ்லிம் - தமிழர் என்ற நிலையில் இக்கட்டான சந்தர்ப்பங்களில் பயன்படுத்துகின்றனர் என்பதை இவ்வாய்வினூடாக இனங்காணமுடிகின்றது. இவ்வாய்வுக்காகவிவரணமற்றும் பகுப்பாய்வியல் முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜுனைதா ஷெரீப் அவர்களின் சாணைக்கூறை நாவல் மற்றும் நேர்காணல் மூலம்பெறப்பட்டதரவுகள் முதனிலைத் தரவுகளாக பயன்படுத்தப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழக ஓய்வு நிலைப் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் , பன்னூலாசிரியர் ஏ.பி.எம். இத்ரீஸ் மற்றும் அரபு மொழி சிரேஷ்ட ஆசிரியர் அஷ்ஷெய்க் எஸ்.எம். எம். ஹில்மி ஆகியோர் நேர்காணலுக்குட்படுத்தப்பட்டு, தகவல்கள் சேகரிக்கப்பட்டனர். இரண்டாம் நிலைத் தரவுகளாக நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் மற்றும் இணையம் ஆகியவைகளினூடாக தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.
|
முக்கிய வார்த்தைகள்: அறபுமொழி, மட்டக்களப்பு முஸ்லிம்கள், ஜுனைதா ஷெரீப், சாணைக்கூறை.
|
துணைநூற்பட்டியல்:
[1] அமீர் அலி, ஏ. சி. எல். (2019). சிந்தனைச் சுவடுகள். Mohamed Pitchai Mohamed Jaleel.
[2] இத்ரீஸ், ஏ. பீ. எம். (2011). சோனகத் தேசம்: மிகச் சுருக்கமான அறிமுகம். சோனகம் பதிப்பகம்.
[3] ஏறாவூர் வரலாற்று ஆய்வு மையம். (2005). ஏறாவூர் வரலாறு. ஏறாவூர் வரலாற்று ஆய்வு மையம்.
[4] ஜுனைதா ஷெரீப். (2023). சாணைக் கூறை. கஸல் பதிப்பகம்.
[5] நளீம், எஸ். ஏ. எம். (2023). ஏறாவூர் படுகொலைகள்: வரலாறும் பின்னணியும். ஏறாவூர் ஸுஹதாக்கள் ஞாபகார்த்கப் பேரவை.
[6] மீரா முகைதீன், எச். எல். (2018). இலங்கை தமிழ்ச் சிறுகதைகளில் அரபு மொழிச் செல்வாக்கு: ஓட்டமாவடி அறபாத்தின் சிறுகதைகளை துணையாகக் கொண்ட ஆய்வு. 5th International Symposium, FIA, SEUSL.
[7] முஹ்சீன், அ. வா. (2023). இலங்கை முஸ்லிம்களை புரிந்து கொள்ளல். கஸல் பதிப்பகம்.
[8] ரவூப் ஸெய்ன். (2024). இலங்கை மத்ரஸா கல்வி. அபிவிருத்திக் கற்கைகள் மையம்.
|