| இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களின் தொழில்முனைவும் குடும்பப் பொருளாதாரநலனுக்கான பங்களிப்புகளும்: களுவன்கேணி– 02 கிராமசேவகர் பிரிவிலிருந்து கிடைத்த சான்றுகள் | ||
![]() |
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) © 2026 by IRJTSR Journal Volume-8 Issue-3 Year of Publication : 2025 Authors : Mrs.Kirushikkah Sasikanth, Mrs. Paheerathy Moses |
|
| Citation: MLA Style: Mrs.Kirushikkah Sasikanth, Mrs. Paheerathy Moses, "Women’s Entrepreneurship and Contributions to Household Economic Well-being in Batticaloa District, Sri Lanka: Evidence from the Kaluvankerny–02 Grama Niladhari Division" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V8.I3 (2026): 79-90. APA Style: Mrs.Kirushikkah Sasikanth, Mrs. Paheerathy Moses, Women’s Entrepreneurship and Contributions to Household Economic Well-being in Batticaloa District, Sri Lanka: Evidence from the Kaluvankerny–02 Grama Niladhari Division, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v8(i3), 79-90. |
||
| சுருக்கம்: இலங்கையின் கிராமப்புற சமூகங்களில் பெண்களின் பொருளாதாரப் பங்கேற்புக ுடும்பவாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் குடும்பத்தின் பொருளாதார நலனைவலுப்படுத்துவதிலும் முக்கியப் பங்குவகிக்கின்றது. குறிப்பாக,பெண்களின் தொழில்முனைவோர் செயல்பாடுகள் சுயதொழில்,சிறுதொழில்,வருமானஉருவாக்கம்,சேமிப்புமற்றும் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்தல் போன்றவழிகளில் குடும்பப் பொருளாதாரத்திற்கு பங்களிக்கக்கூடியவையாக உள்ளன. இருப்பினும்,பெண்கள் தொழில்முனைவோர் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும்,அவற்றின் தொடர்ச்சியானதன்மை, குடும்பவருமானத்திற்கான பங்களிப்பு,சேமிப்பு,சொத்துரிமைமற்றும் பொருளாதாரமுடிவெடுப்பில் பெண்களின் பங்குஆகியவைகிராமப்புறமட்டத்தில் மேலும் ஆராயப்படவேண்டியுள்ளன. இப்பின்னணியில், இவ்வாய்வு மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவன்கேணி–02 கிராமசேவகர் பிரிவில் பெண்களின் தொழில்முனைவோர் செயல்பாடுகள் குடும்பப் பொருளாதாரநலனில் ஏற்படுத்தும் பங்களிப்பைசமூகவியல் நோக்கில் ஆராய்கின்றது.இவ்வாய்வில் அளவுசார் மற்றும் பண்புசார் அணுகுமுறைகளை ஒருங்கிணைத்தகலப்பு ஆய்வு முறைபயன் படுத்தப்பட்டது. அளவுசார் தரவுகளுக்காக 150 பெண் பயனாளர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன்,பண்புசார் தரவுகளுக்காக ஆழமான நேர்காணல்கள், முக்கியதகவலளிப்போர் நேர்காணல்கள் மற்றும் குழுக் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. அளவுசார் தரவுகள் ஆiஉசழளழகவ நுஒஉநட மூலம் சதவீதங்கள்,அட்டவணைகள் மற்றும் வரைபடங்களின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்பட்டன. பண்புசார் தரவுகள் கருப்பொருள் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்பட்டன.ஆய்வின் முடிவுகள்,பெண்களின் தொழில்முனைவோர் மற்றும் சுயதொழில் நடவடிக்கைகள் குடும்பப் பொருளாதாரத்தில் நேர்மறையான பங்களிப்பைவழங்கியுள்ளதைக் காட்டுகின்றன. அபிவிருத்தித் தலையீடுகளில் பங்கேற்பதற்குமுன்னர் 78 மூபெண்களின் குடும்பமாதவருமானம் ரூ.15,000-க்கும் குறைவாக இருந்தநிலையில், பங்கேற்புக்குப் பின்னர் 58மூபெண்கள் தங்களதுகுடும்பமாதவருமானம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், 43மூபெண்கள் சுயதொழிலில் ஈடுபட்டிருந்த போதிலும், 57மூபெண்கள் தொழிலின்றிகாணப்பட்டனர்.அதேவேளை, 56மூபெண்களிடம் சேமிப்புப் பழக்கம் காணப்பட்டாலும்,சொத்துரிமை 20மூ மட்டுமேகாணப்பட்டது. எனவேபெண்களின் தொழில்முனைவோர் செயல்பாடுகள் குடும்பவருமானம் மற்றும் வாழ்வாதாரத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தினாலும், அவை இன்னும் அனைத்துபெண்களுக்கும் நிலையானதொழில் வாய்ப்புகளாகவும் முழுமையானபொருளாதாரஅதிகாரமளித்தலாகவும் மாறவில்லைஎன்பதை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, சந்தைஅணுகல், தொடர்ச்சியான தொழிற்பயிற்சி, நிறுவனஆதரவு, போக்குவரத்து, தொடர்பாடல் மற்றும் பெண்களின் முடிவெடுக்கும் அதிகாரம் ஆகியவைபெண்களின் தொழில்முனைவோர் நடவடிக்கைகளையும் குடும்பப் பொருளாதாரநலனையும் மேலும் வலுப்படுத்தவேண்டியமுக்கியகாரணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. |
||
| முக்கிய வார்த்தைகள்: பெண்கள், தொழில்முனைவோர், குடும்பப் பொருளாதாரநலன், வாழ்வாதாரம், சுயதொழில், பொருளாதாரமவலுëட்டல், அபிவிருத்தித் தலையீடுகள், களுவன்கேணி–02. |
||
| துணைநூற்பட்டியல்: [1] De Mel, S., McKenzie, D., & Woodruff, C. (2014). Business training and female enterprise start-up, growth, and dynamics: Experimental evidence from Sri Lanka. Journal of Development Economics, 106, 199–210. link [2] De Silva, D. C. H., & Wijewardene, L. (2019). A literature review on individual factors affecting the business performance of women entrepreneurs in Sri Lanka. International Journal of Accounting and Business Finance, 5(1), 45–59. link [3] International Finance Corporation (IFC). (2020). Gendered impacts of COVID-19 on small and medium-sized enterprises in Sri Lanka. World Bank Group. [4] Nimeshi, G. K. S., & Rodrigo, M. (2024). Barriers for women entrepreneurship operating in the SME sector Sri Lanka. Journal of Business and Technology, 8(1), 1–13. link [5] OECD. (2021). Sri Lanka: Entrepreneurship policies through a gender lens. OECD. [6] Rathnayaka, G. M. K., & Surangi, H. A. K. N. S. (2022). Constraints faced by rural female entrepreneurs in Sri Lanka: A study based on Nuwara Eliya District. Journal of Business Studies, 9(1), 57–76. link [7] Shahila, Y., &Kajendra, K. (2021). Factors influencing financial performance of rural women entrepreneurs in Northern Sri Lanka. Proceedings of the International Conference on Business Management, 17. link [8] Shanmugathas, S. (2021). Entrepreneurial marketing dimensions: Evidence from women-owned SMEs in Sri Lanka. Sri Lanka Journal of Marketing, 7(3), 181–211. link [9] Surangi, H. A. K. N. S., Wijetunge, W. A. D. S., & Samarakoon, S. M. A. K. (2025). Reframing support: Institutional perspectives on female entrepreneurship development in Sri Lanka. SAGE Open. link [10] United Nations Development Programme (UNDP). (2025). Unlocking challenges: Empowering women-owned MSMEs in Sri Lanka for inclusive economic growth. UNDP Sri Lanka. [11] United Nations Development Programme. (2016). Trade winds of change: Women entrepreneurs on the rise in South Asia. UNDP. [12] Wickramasinghe, A. (1993). Development intervention and the changing status of rural women in Sri Lanka. Geoforum, 24(1), 63–69. link [13] Wijewardhana, B. V. N., & Dias, M. M. M. (2022). Enhancing rural women empowerment in Sri Lanka. International Journal of Governance and Public Policy Analysis, 3(1). link [14] World Bank. (2024). Sri Lanka Development Update 2024. World Bank. |
||

