மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பெண்களின் அரசியல் பங்கேற்பு: 2018 தேர்தலினை அடிப்படையாகக் கொண்ட தோர் ஆய்வு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2026 by IRJTSR Journal
Volume-8 Issue-3
Year of Publication : 2025
Authors : A. Kanneraj


Citation:
MLA Style: A. Kanneraj, "Women’s Political Participation in Local Government Elections in Batticaloa District: A Study Based on the 2018 Elections" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V8.I3 (2026): 91-100.
APA Style: A. Kanneraj, Women’s Political Participation in Local Government Elections in Batticaloa District: A Study Based on the 2018 Elections, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v8(i3), 91-100.

சுருக்கம்:
இலங்கையில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறையில் பெண்களுக்கான 25 வீதம் இடவொதுக்கீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச்சட்டத் திருத்தம் 2018 ஆம் ஆண்டு நடை பெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் முதல் முறையாக நடைமுறைப் படுத்தப்பட்டதன் மூலம் பெண்களின் அரசியல் பங்கேற்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. எனினும், எண்ணிக்கையளவில் பெண்களின் பிரதிநிதித்துவம் உயர்ந்திருந்தாலும் அவர்களின் அரசியல் அதிகாரமளிப்பு, தீர்மானம் மேற்கொள்ளலில் பெண்களின் பங்களிப்பு மற்றும் செயற்றிறன் ஆகியவை தொடர்பில் பல்வேறு சவால்கள் தொடர்ந்தும் காணப்படுகின்றன. இவ்வாய்வு 2018 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் நடை பெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலை அடிப்படையாகக் கொண்டு பெண்களின் அரசியல் பங்கேற்பின்தன்மை, அதனைப்பாதிக்கும் காரணிகளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக பெண்களின் வேட்புமனுத் தெரிவு, தேர்தல் வெற்றி, அரசியல் கட்சிகளின் பங்களிப்பு, சமூக பொருளாதார மற்றும் பண்பாட்டுத் தடைகள், குடும்ப ஆதரவு, தேர்தல் செலவுகள் மற்றுத் தேர்தலுக்குப் பிந்திய அரசியல் செயற்பாடுகள் ஆகிய அம்சங்கள் இவ்வாய்வில் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. இவ்வாய்வு விளக்கவியல் மற்றும் பகுப்பாய்வு அணுகு முறைகளை அடிப்படையாகக் கொண்டதாகும். தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட தேர்தல்தரவுகள், அரசாங்க அறிக்கைகள், ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் தொடர்புடைய இலக்கியங்கள் இரண்டாம் நிலைத்தரவுகளாக பயன்படுத்தப்பட்டுள்ளன. பெறப்பட்டதகவல்கள் ஒப்பீட்டு மற்றும் உள்ளடக்கப் பகுப்பாய்வு முறைகளின் மூலம் அய்வு செய்யப்பட்டுள்ளன. ஆய்வின் கண்டுபிடிப்புக்கள், 2018ஆம் இடம் பெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இடவொதுக்கீட்டு முறை, பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை கணிசமாக அதிகரித்திருந்தாலும், பெண்கள் அரசியல் தீர்மானம் மேற்கொள்ளல், தலைமைத்துவம், மற்றும் சுயாதினமான செயற்பாடு போன்ற விடயங்கள், மற்றும் பல்வேறு சமூகச்சவால்கள் எதிர் கொள்வதை வெளிப்படுத்துகின்றன. எனவே பெண்களின் அரசியல் பங்கேற்பை எண்ணிக்கையளவில் மட்டு மல்லாது தரரீதியாகவும் வலுப்படுத்துவதற்கு அரசியல்கட்சிகள், அரசாங்கம், தேர்தல் ஆணைக்குழு மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை இவ்வாய்வு வலியுறுத்துகின்றது.

முக்கிய வார்த்தைகள்:
பெண்களின் அரசியல் பங்கேற்பு, உள்ளூராட்சி மன்றத் தேர்தல், மட்டக்களப்பு மாவட்டம், பெண்களுக்கான இட வொதுக்கீடு, அரசியல் பிரதிநிதித்துவம் 2018 உள்ளூராட்சி மன்றத்தேர்தல்.

துணைநூற்பட்டியல்:
[1] Centre for Policy Alternatives. (2018). The new electoral system for local government elections in Sri Lanka. Colombo: Centre for Policy Alternatives.
[2] Election Commission of Sri Lanka. (2018). Local Government Election Results – 2018. Colombo: Election Commission of Sri Lanka.
[3] Election Commission of Sri Lanka. (2018). Manual for candidates: Local government elections. Election Commission of Sri Lanka.
[4] Election Commission of Sri Lanka. (2019). Report on the local authorities’ elections – 2018. Election Commission of Sri Lanka.
[5] Ministry of Public Administration, Provincial Councils and Local Government. (2026). Local Authorities – Batticaloa District. Colombo, Sri Lanka.
[6] United Nations Development Programme. (2021). Women’s political participation in Sri Lanka: Challenges and opportunities. UNDP Sri Lanka.