| மு.சிவலிங்கத்தின் இலக்கியப்பணிகள்- ஒரு பார்வை | ||
![]() |
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) © 2026 by IRJTSR Journal Volume-8 Issue-4 Year of Publication : 2025 Authors : N.Sudarshini |
|
| Citation: MLA Style: N.Sudarshini, "The Literary Works of Mu. Sivalingam – An Overview" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V8.I4 (2026): 11-26. APA Style: N.Sudarshini, The Literary Works of Mu. Sivalingam – An Overview, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v8(i4), 11-26. |
||
| சுருக்கம்: ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில், குறிப்பாக மலையக இலக்கிய வரலாற்றில் 1960-கள் ஒரு முக்கியமான காலகட்டமாகும். சாதியொழிப்பு, வர்க்கப் போராட்டம் மற்றும் உழைக்கும் மக்களின் உரிமைச் சவால்கள் போன்ற பல உள்ளடக்கங்களைத் தமது எழுத்துகளின் வழி இலக்கியத்தின் மையப்பொருளாக மாற்றிய பெருமை இக்காலகட்டத்துப் படைப்பாளர்களைச் சேரும். அவ்வகையில், இக்காலகட்ட இலக்கியக்கர்த்தாக்களுள் ஒருவரான மு.சிவலிங்கம் படைப்பிலக்கியங்களின் வாயிலாகத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பையும், அவரது படைப்புகளின் உள்ளடக்கத்தையும் மதிப்பீடு செய்யும் நோக்கில், ‘மு.சிவலிங்கத்தின் இலக்கியப்பணிகள் - ஒரு பார்வை’ எனும் தலைப்பில் இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவரது சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் மற்றும் அரசியல்-சமூகப் பதிவுகள் வழி வெளிப்படும் கருத்தியல் வெளிப்படுத்துவதோடு, ஈழத்து இலக்கியப் பரப்பில் அவரது தனித்துவமான ஆளுமையையும் வகிபாகத்தையும் மதிப்பிடுகிறது. மலையக மக்களின் வாழ்வியல் மற்றும் பண்பாட்டுக்கூறுகளை அடிப்படையாகக் கொண்டு, வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமன்றிச் சமுதாய வளர்ச்சிக்கு வழிகாட்டும் நோக்கோடு இவரது படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. நாவல்கள், சிறுகதைகள் உள்ளிட்ட இவரது படைப்புகள் மலையகத்தின் அறியப்படாத வாழ்வியல் பதிவுகளைக் காலத்தைக் கடந்து நம் கண்முன் நிறுத்துகின்றன. காலத்திற்கேற்ற கருப்பொருள்களைக் கொண்டு அன்றாட வாழ்வின் யதார்த்தங்களைப் படைப்புகளின் வழி தந்த மு.சிவலிங்கத்தின் இலக்கியப் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அத்துடன், மலையகம் சார்ந்த பதிவுகள் மட்டுமன்றிப் பிற பிரதேசங்கள் மற்றும் பொதுவான சமூகப் பிரச்சினைகள் குறித்தும் இவர் தனது படைப்புகளில் பதிவு செய்துள்ளமை கவனத்திற்குரியது. |
||
| முக்கிய வார்த்தைகள்: இலக்கியம், இலக்கியக் கர்த்தாக்கள், மலையகம், மு.சிவலிங்கம். |
||
| துணைநூற்பட்டியல்: [1] ....“தேசிய அடையாளமின்றி அரசியல் விபரீதங்களை சந்திக்கும்’இந்தியத் தமிழர்கள்.” Moomaseena, 2017.02.12> Accessed date 01.12.2023{ link} [2] சிவலிங்கம்.மு., “தொழிற்சங்க அரசியல்வாதிகளுக்கு எதிராகச் சட்டம் உருவாக்கப்படவேண்டும்,”, Moomaseena, 2018.12.01> Accessed date 01.12.2023 { link} [3] ……..> “இன்று உலக சிறுபான்மை இனங்களின் உரிமைத் தினமாகும்.” Moomaseena, 2020.12.01> Accessed date 01.12.2023 { link} [4] ……..> “ ‘வாக்குறுதி’ என்ற குறுந்திரைப்படம்.” Moomaseena, 2020.12.01> Accessed date01.12.2023{ link} [5] ……..> “மலையகத் தமிழ்ச் சிறுகதைகளில் மத்திய தர வர்க்கம்.” Moomaseena, 2020.12.01> Accessed date 01.12.2023{ link} [6] ……..> “க.பெ.ரணசிங்கம்...” Moomaseena, 2020.12.01> Accessed date 01.12.2023{ link} [7] ……..> “நமது கலைத்துறை … சுதேசிய வளர்ச்சியில் நிமிர வேண்டும்;.” Moomaseena, 2020.12.01> Accessed date 01.12.2023{ link} [8] சிவலிங்கம்.மு., “சட்டங்களுக்குற்பட்ட பிரஜாவுரிமையும், திணைக்களத்துக்குற்பட்ட ஆள்பதிவும் நீக்கப்பட வேண்டும்” தினக்குரல், 19.02.2017 [9] சிவலிங்கம்.மு,“புதியகாற்று படத்தில் மாயாண்டி தோட்டத் தலைவராக மு.சிவலிங்கம்”, வாரமஞ்சரி, 2018.11.18 ( link) [10] ……..> “மலையக சமூகம் எழுச்சி பெற இலக்கியவாதிகளே காரணம்” Moomaseena, 2018.12.01> Accessed date 01.12.2023{ link} |
||

