| விசேட தேவையுடைய மாணவர்களை முகாமை செய்வதில் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் | ||
![]() |
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) © 2026 by IRJTSR Journal Volume-8 Issue-4 Year of Publication : 2025 Authors : Paramathayalan Mathusan |
|
| Citation: MLA Style: Paramathayalan Mathusan, "Challenges faced by teachers in managing students with special needs" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V8.I4 (2026): 33-44. APA Style: Paramathayalan Mathusan, Challenges faced by teachers in managing students with special needs, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v8(i4), 33-44. |
||
| சுருக்கம்: கல்வியில் சமவாய்ப்புக்களை ஏற்படுத்தும் முகமாக அனைவரையும் உள்ளடக்கிய கல்வியானது சர்வதேச ரீதியில் விருத்தியடைந்து வருகின்ற எண்ணக்கருவாக மாறியுள்ளது. இவ்வாய்வானது மட்டக்களப்புமாவட்டத்தை மையமாகக் கொண்டமைந்துள்ளதோடு விசேட தேவையுடைய மாணவர்களை கையாள்வதிலும் முகாமைப்படுத்துவதிலும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்களை அறிந்து கொள்வதனை நோக்கமாகக் கொண்டு அளவை நிலை ஆய்வாக இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்டக்களப்பு, மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு மேற்கு,கல்குடா, பட்டிருப்பு கல்வி வலயங்களில்விசேட கல்வி அலகுகளைக் கொண்ட 21 பாடசாலைகளில் 50மூ ஒதுக்கீட்டு மாதிரியின் அடிப்படையில் 10பாடசாலைகள்மாதிரிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு இப்பாடசாலைகளிலிருந்து அனைத்து அதிபர்களும் உப அதிபர்களும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களும் இடைநிலைப்பிரிவு ஆசிரியர்களும், விசேட தேவையுடைய மாணவர்களின் பெற்றோர்களும் நோக்க மாதிரியின் அடிப்படையில் ஆய்வு மாதிரிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு இவர்களிடமிருந்து வினாக்கொத்து,நேர்காணல்,குவியக்குழுக் கலந்துரையாடல் முதலான ஆய்வுக் கருவிகளினூடாக தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.வினாக்கொத்து மூலமாகப் பெறப்பட்ட அளவுசார் தரவுகள் ளுPளுளு (ஏநசளழைn 27) மூலமாக பகுப்பாய்வு செய்யப்பட்டு பியர்சனின் இணைவுக் குணகம் கணிக்கப்பட்டு ஆiஉசழளழவக நுஒஉநட மூலம் அட்டவணைகள், சலாகை வரைபுகள், சிதறற் புள்ளி வரைபுகள் என்பன மூலம் வகை குறித்து காட்டப்பட்டுள்ளதுடன் நேர்காணல், குவியக்குழுக் கலந்துரையாடல் மூலம் பெறப்பட்ட பண்புசார் தரவுகள் விபரணப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளது.பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக்கொண்டு ஆய்வு நோக்கங்களின் அடிப்படையில்; கலப்பு ஆய்வு அணுகுமுறையில் பகுப்பாய்வு செய்யப்பட்டு ஆய்வின் முடிவுகளாக விசேட கல்வி அலகுகளுக்கான வள ஒதுக்கீடு இன்மை, விசேட தேவையுடைய மாணவர்களுக்கான பொருத்தமான கற்றல் சூழல் இன்மை(சஸ்ரீ0.752), அணுகல் வசதிகள் பொருத்தமின்மை(சஸ்ரீ0.795), சமூக ஆதரவு குறைவாக உள்ளமை(சஸ்ரீ0.798), மாணவர்களை முகாமை செய்வதற்கு தேவையானஆளணி இன்மை(சஸ்ரீ0.795)முதலானவை இனங்காணப்பட்டதுடன், இதற்கான பரிந்துரைகளாக தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவிகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் அந்நிறுவனங்களுடன் சுமூகமான தொடர்பினை பேணுதல்,க.பொ.த உயர்தர மாணவர்களின் செயற்றிட்டங்களை விசேட கல்வி மாணவர்களுக்கான வசதிகளாக பயன்படுத்திக் கொள்ளல், விசேட கல்வி ஆசிரியர்களுக்கு வாண்மைத்துவ பயிற்சிகளை வழங்குதல், தன்னார்வ தொண்டர் ஆசிரியர்களை சேவையில் இணைத்தல், விசேட கல்வி தொடர்பில் சமூகத்திடையே விழிப்புணர்வினை மேற்கொள்ளுதல் முதலான விதப்புரைகளும் இவ்வாய்வின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளன. |
||
| முக்கிய வார்த்தைகள்: விசேட கல்வி, உள்ளடங்கல் கல்வி, முகாமைத்துவம், விசேட தேவைசார் மாணவர்கள். |
||
| துணைநூற்பட்டியல்: [1] அருள்மொழி, செ.(2017), கற்பித்தலுக்கான உளவியல், துர்க்கா அச்சகம், கொக்குவில், மட்டக்களப்பு. [2] தனபாலன், பா.(2019), கல்விப் பிரயோக உளவியல், குமரன் புத்தக இல்லம், கொழும்பு. [3] இலங்கை திறந்த பல்கலைக்கழகம், (2010). விசேட தேவைகள் சார் கல்விக்கான பல்துறை அணுகுமுறைகள், நாவல, நுகேகொட. [4] கல்வி அமைச்சு (2024), பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஒழுங்கமைப்பு பற்றிய சுற்றுநிருபம் மற்றும் வழிகாட்டுதல்கள், இசுருபாய, பத்தரமுல்ல. [5] கல்வி அமைச்சு (2024), விசேட தேவைகளுடன் கூடிய [6] மாணவர்களின் கற்றல் - கற்பித்தல் செயல்பாடு மற்றும் மதிப்பீட்டு நடவடிக்கைகளை இலகுவாக்குவதற்காக வெளியிடும் விசேட வசதிகள் வழங்கும் சுற்றறிக்கை மற்றும் ஆலோசனை கையேடு, இசுருபாய, பத்தரமுல்ல. [7] Abakah, F., Morgan, A.-A. A., Sodje, E. O., & Dugbartey, F. (2026). Teachers' perspectives on inclusive education for children with special needs. Journal of Global Research in Education and Social Science, 20(2), 49–63. link [8] Muna, Z., Julistia, R., Astuti, W., & Iramadhani, D. (2026). Teacher knowledge and readiness for inclusive education: Supporting children with special needs. Atfaluna: Journal of Islamic Early Childhood Education, 9(1), Article 1. link [9] சஸ்னி, மொ.ஹ.சா (2021). விசேட தேவையுடைய மாணவர்கள் கற்றலில் எதிர்கொள்ளும் சவால்களும் அவர்களுக்கான கற்றல் வாய்ப்புக்களும், Muallim Journal of Social Science and Humanities, DOI: link |
||

