| வேள்பாரி நாவலில் மருத்துவ அறிவும் வாழ்வியல் சிந்தனையும் | ||
![]() |
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) © 2026 by IRJTSR Journal Volume-8 Issue-3 Year of Publication : 2025 Authors : Dr. B. Shyamaladevi |
|
| Citation: MLA Style: Dr. B. Shyamaladevi, "Medical Knowledge and Perspectives on Life in the Novel *Velpari*" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V8.I3 (2026): 69-78. APA Style: Dr. B. Shyamaladevi, Medical Knowledge and Perspectives on Life in the Novel *Velpari*, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v8(i3), 69-78. |
||
| சுருக்கம்: சு. வெங்கடேசன் எழுதிய‘ வீரயுகநாயகன் வேள்பாரி’ நாவல், பறம்புநிலத்தின் இயற்கை, மக்கள்வாழ்வு, போரியல், உணவு, மூலிகைஅறிவு, உடல்அனுபவம், உயிர்பாதுகாப்பு மற்றும் சமூக உறவுகளை விரிவானபுனைவுலகில் காட்சிப்படுத்துகிறது. அவற்றுள் மருத்துவஅறிவும் வாழ்வியல் சிந்தனையும் தனித்தஆய்வுக்குரிய கூறுகளாகஅமைகின்றன. இக்கட்டுரை நாவலில் இடம்பெறும் மூலிகைப்பயன்பாடு, வலிஉணர்தல், காயத்தைத்தொட்டு ஆராய்தல், மருத்துவக்கூடார அமைப்பு, போர்க்களக்காயங்கள், நஞ்சியல் அறிவு, நஞ்சைத்தவிர்க்கும் போரியல்நெறி, பல்லுயிர் பாதுகாப்பு போன்ற கூறுகளைத்தேர்ந்தெடுத்தசான்றுகளின் அடிப்படையில்ஆராய்கிறது. ஆய்வு முறை உரை நெருங்கியபகுப்பாய்வு, விளக்கவியல் அணுகுமுறை மற்றும் ஒப்பீட்டு இலக்கிய அணுகுமுறைகளை ஒருங்கிணைக்கிறது. நாவலில்மருத்துவம்தனித்ததொழிலாகமட்டுமன்றி, நிலம்–மூலிகை–உடல்–உணவு–போர்–சமூகம் ஆகியவற்றின் பரஸ்பர உறவாகச்சித்திரிக்கப்படுவது கண்டறியப்படுகிறது. குறிப்பாக, ‘தனிமயக்கி’ போன்றமூலிகைகள், காயங்களைக்கண்டறியும்முறியன் ஆசானின்உடல்-உணர்வுஅடிப்படையிலானஅணுகுமுறை, மருத்துவக்கூடாரத்தின் செயல்பாடு, நஞ்சைஎதிர் கொள்ளும் அறிவு ஆகியவை அனுபவ அறிவின் பல அடுக்குகளை வெளிப்படுத்துகின்றன. இதனுடன் பல்லுயிர் ஓம்புதல் இணையும் போது மருத்துவ அறிவு ஒரு வாழ்வியல் நெறியாக உயர்கிறது. எனவே, ‘வேள்பாரி’ நாவல் மருத்துவத்தகவல்களின் தொகுப்பாக அல்லாது, உயிரையும் உடலையும் இயற்கையோடு இணைத்துப்பார்க்கும் பண்பாட்டு அறிவுலகின் இலக்கியப்பிரதியாகப்புரிந்து கொள்ளப்பட வேண்டும். |
||
| முக்கிய வார்த்தைகள்: வேள்பாரி, மருத்துவஅறிவு, மூலிகை, நஞ்சியல், காயச்சிகிச்சை, வாழ்வியல், பல்லுயிர். |
||
| துணைநூற்பட்டியல்: [1] வெங்கடேசன், சு. (2022). *வீரயுகநாயகன்வேள்பாரி – பாகம் 1 & 2*. சென்னை: விகடன்பிரசுரம். [2] American Psychological Association. (2024). *General manuscript preparation guidelines*. APA Publishing. [3] Rani, B., & Kalaiselvi. (2022). சங்க இலக்கியத்தில் மஞ்சள் நிறமலர்களின் தனித்துவமும் மருத்துவகுணங்களும். *International Research Journal of Tamil, 4*(Special Issue), 18–27. link [4] சங்க இலக்கியத்தில் பிரதிபலிக்கும் மருத்துவ அறிவு: ஒருஆய்வு. (2025). *Tamilmanam International Research Journal of Tamil Studies*. [5] சித்தமருத்துவம் ஒரு இலக்கியமரபு: தமிழ் இலக்கியங்கள் வழியாக. (2025). *Tamilmanam International Research Journal of Tamil Studies*. [6] நற்றிணை உணர்த்தும் சங்ககாலமருத்துவம்: ஓர்ஆய்வு. (2025). *Tamilmanam International Research Journal of Tamil Studies*. [7] சங்க இலக்கியத்தில் நாட்டு மருத்துவம். (n.d.). *தினமணிதமிழ்மணி*. [8] சங்க இலக்கியத்தில் நோய்களும் மருத்துவமும். (n.d.). *அறிவுச்சாரல்*. [9] சங்க இலக்கியத் தாவரங்கள். (n.d.). *தமிழ் விக்கி மூலம்*. |
||

