இலங்கையின் தேசிய ஊடகக் கொள்கையில் டிஜிட்டல் மயமாக்கலின் தாக்கம்: இணையவழிப் பாதுகாப்பு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான சவால்கள் ஓர் விரிவான ஆய்வு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2026 by IRJTSR Journal
Volume-8 Issue-3
Year of Publication : 2025
Authors : Mohamed Zumry


Citation:
MLA Style: Mohamed Zumry, "The Impact of Digitalization on Sri Lanka’s National Media Policy: Challenges for Cybersecurity and Freedom of Expression – A Comprehensive Study" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V8.I3 (2026): 101-111.
APA Style: Mohamed Zumry, The Impact of Digitalization on Sri Lanka’s National Media Policy: Challenges for Cybersecurity and Freedom of Expression – A Comprehensive Study, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v8(i3), 100-111.

சுருக்கம்:
இருபத்தியோராம் நூற்றாண்டின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பப் புரட்சியானது இலங்கையின் பாரம்பரிய ஊடகச் சூழலை முற்றாக உருமாற்றியுள்ளது (Marsoof, 2021). இணையவழி வெளியீடுகள், சமூக ஊடகத் தளங்கள் மற்றும் பயனர் உருவாக்க உள்ளடக்கங்கள் மக்களின் தகவலறியும் உரிமையையும் ஜனநாயகப் பங்கேற்பையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் விரிவுபடுத்தியுள்ள போதிலும்; தவறான தகவல் பரவல் (Misinformation), போலிச் செய்திகள் (Disinformation), இனவாத வெறுப்புப் பேச்சுக்கள் (Hate Speech), இணையவழிக் குற்றங்கள் மற்றும் தேசியப் பாதுகாப்பு தொடர்பான புதிய பரிமாண சவால்களைத் தோற்றுவித்துள்ளன (CPA, 2023; SLCERT, 2024). இத்தகைய சூழலில், இலங்கையின் ஊடக ஒழுங்குமுறை கட்டமைப்பானது போதிய கொள்கைத் தெளிவின்றி, குற்றவியல் மற்றும் தண்டனைச் சட்டங்களின் வழியாகவே பெரும்பாலும் கையாளப்பட்டு வருகின்றது (Human Rights Watch, 2024). இவ்வாய்வு, இலங்கையின் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 14(1)(ய) உறுப்புரை உத்தரவாதம் செய்யும் பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்திற்கும் (Government of Sri Lanka, 1978), 2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க இணையவழிப் பாதுகாப்புச் சட்டம் (Online Safety Act No. 9 of 2024), 2022 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் (Personal Data Protection Act No. 9 of 2022) மற்றும் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான உடன்படிக்கைச் சட்டம் (ICCPR Act No. 56 of 2007) ஆகியவற்றின் ஊடாக முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு ஒழுங்குமுறைகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை விரிவாக ஆராய்கிறது (Government of Sri Lanka, 2007b; Government of Sri Lanka, 2022; Government of Sri Lanka, 2024). பண்புசார் மற்றும் ஆவணப் பகுப்பாய்வு முறையியலைப் பயன்படுத்தி, இலங்கையின் சட்டக் கட்டமைப்புகள், சர்வதேச மனித உரிமைகள் தராதரங்கள், தொழில்நுட்பக் காரணிகள் மற்றும் புள்ளிவிவரத் தரவுகள் இங்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. இறுதியில், அரச கட்டளை மேலாதிக்கத்தைக் குறைத்து, சுயாதீனப் பொறிமுறைகள், சிவில் சமூகம் மற்றும் ஊடக நிறுவனங்களை உள்ளடக்கிய முத்தரப்பு 'இணை-ஒழுங்குமுறை” (Co-regulation) மாதிரியை அடிப்படையாகக் கொண்ட ஒரு முற்போக்கான தேசிய ஊடகக் கொள்கைக்கான பரிந்துரைகளையும் விரிவான தீர்வுப் பாதையையும் இவ்வாய்வு முன்வைக்கிறது (Tambini et al., 2008; FMM, 2024).

முக்கிய வார்த்தைகள்:
இணையவழிப் பாதுகாப்புச் சட்டம், தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம், வெறுப்புப் பேச்சு, இணை-ஒழுங்குமுறை மாதிரி, எண்ணிம ஊடகம் மற்றும் ஜனநாயகம்.

துணைநூற்பட்டியல்:
[1] Amnesty International, 2020. Sri Lanka: Old habits die hard – Ongoing use of PTA and ICCPR Act to target dissent. London: Amnesty International Publications. Available at: link [Accessed 18 August 2026].
[2] Centre for Policy Alternatives (CPA), 2023. A Review of the Legal Framework Governing Freedom of Expression Online in Sri Lanka. Colombo: Centre for Policy Alternatives.
[3] Centre for Policy Alternatives (CPA), 2024. Critique of the Online Safety Act No. 9 of 2024: Implications for Human Rights and Digital Democracy in Sri Lanka. Colombo: CPA.
[4] Free Media Movement (FMM), 2024. Media Freedom in Sri Lanka: Annual Monitoring and Incident Report. Colombo: Free Media Movement.
[5] Government of Sri Lanka, 1973. Sri Lanka Press Council Law, No. 5 of 1973. Colombo: Department of Government Printing.
[6] Government of Sri Lanka, 1978. The Constitution of the Democratic Socialist Republic of Sri Lanka (with amendments). Colombo: Department of Government Printing.
[7] Government of Sri Lanka, 2007a. Computer Crimes Act, No. 24 of 2007. Colombo: Department of Government Printing.
[8] Government of Sri Lanka, 2007b. International Covenant on Civil and Political Rights (ICCPR) Act, No. 56 of 2007. Colombo: Department of Government Printing.
[9] Government of Sri Lanka, 2016. Right to Information Act, No. 12 of 2016. Colombo: Department of Government Printing.
[10] Government of Sri Lanka, 2022. Personal Data Protection Act, No. 9 of 2022. Colombo: Department of Government Printing.
[11] Government of Sri Lanka, 2024. Online Safety Act, No. 9 of 2024. Colombo: Department of Government Printing.
[12] Habermas, J., 1989. The Structural Transformation of the Public Sphere: An Inquiry into a Category of Bourgeois Society. Translated by T. Burger. Cambridge, MA: MIT Press.
[13] Habermas, J., 2006. Political Communication in Media Society: Does Democracy Still Enjoy an Epistemic Dimension? The Impact of Normative Theory on Empirical Research. Communication Theory, 16(4), pp. 411–426.
[14] Human Rights Watch, 2024. Sri Lanka: Online Safety Law Crushes Free Speech – Flawed Process, Vague Content Restrictions Threaten Rights. New York: HRW.
[15] Marsoof, A., 2021. The Interplay between Freedom of Expression and Cybersecurity in Sri Lanka: A Critical Review. Sri Lanka Journal of International Law, 28(2), pp. 89–114.
[16] Sri Lanka Computer Emergency Readiness Team (SLCERT), 2024. Annual Cyber Security Incident Statistics & Reporting 2023–2024. Colombo: SLCERT.
[17] Sunstein, C.R., 2018. #Republic: Divided Democracy in the Age of Social Media. Princeton: Princeton University Press.
[18] Tambini, D., Leonardi, D. and Marsden, C., 2008. Codifying Cyberspace: Communications Self-regulation in the Age of Internet Convergence. London: Routledge.
[19] Telecommunications Regulatory Commission of Sri Lanka (TRCSL), 2025. Statistical Overview of Telecommunication Market and Internet Subscriptions in Sri Lanka. Colombo: TRCSL.
[20] United Nations Human Rights Committee (UNHRC), 2011. General Comment No. 34: Article 19 (Freedoms of opinion and expression), CCPR/C/GC/34. Geneva: United Nations.
[21] Zuboff, S., 2019. The Age of Surveillance Capitalism: The Fight for a Human Future at the New Frontier of Power. New York: PublicAffairs.